புதுடில்லி: பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (டிச.08) நடைபெற்றது.
![]()
|
இது குறித்து கூறப்படுவதாவது:முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை குழு ஆலோசனை
![]()
|
கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் முப்படை தலைமைதளபதி மற்றும் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் எனவும், பிபின் ராவத் முக்கிய பதவியில் இருந்ததால் அவரது இடத்தில் யாரை நியமிப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.