பொது செய்தி

இந்தியா

முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உடல் டிச.10 ல் நல்லடக்கம்!

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் மற்ற ராணுவ வீரர்களின் உடல்கள் வெள்ளியன்று (டிச.10) மாலை டில்லி கொண்டு செல்லப்படும். பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும். நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் பாதுகாப்புப் படை பயிற்சிக்

புதுடில்லி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் மற்ற ராணுவ வீரர்களின் உடல்கள் வெள்ளியன்று (டிச.10) மாலை டில்லி கொண்டு செல்லப்படும். பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்.



latest tamil news



நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் பாதுகாப்புப் படை பயிற்சிக் கல்லூரி உள்ளது. அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள், விமானப் படையினர் என 14 பேர் எம்.ஐ., 17 வி5 ஹெலிகாப்டரில் பயணித்தனர். கோவை அருகே உள்ள சூலூர் விமானப் படை தளத்திலிருந்து பிற்பகலில் புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் குன்னூர், காட்டேரி, நஞ்சப்பா சத்திரம் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. அதில் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட 14 பேரும் உயிரிழந்தனர்.


latest tamil news



பாதுகாப்புப் படை பயிற்சி கல்லூரியில் பணியாற்றும் குரூப் கேப்டன் வரூண் சிங் மட்டும் காயங்களுடன் பிழைத்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் ஸ்டாலின், ராணுவ அதிகாரிகள், வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அனைவரது உடல்களும் டில்லிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் முழு ராணுவ மரியாதையுடன் டிச. 10-ம் தேதி நல்லடக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SKY - xxxx,இந்தியா
09-டிச-202103:36:29 IST Report Abuse
SKY What you mean by 'Nalladakkam'?
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
08-டிச-202122:43:50 IST Report Abuse
Sankar Ramu மிக பெரிய இழப்பு இந்தியாவிற்க்கு. ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
Rate this:
Cancel
Ramanathan Muthiah - Madras,இந்தியா
08-டிச-202122:31:24 IST Report Abuse
Ramanathan Muthiah நம் நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு. வருத்தம் அளிக்கிறது. அவரும் மற்றவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். ஓம் சாய் ராம். இந்த விபத்திற்கான காரணத்தை நாட்டு மக்களுக்கு நம் பாரத அரசும் ராணுவம் தெரியப்படுத்த வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X