முக்கிய பிரச்னைகள் குறித்து பார்லி.,யில் விவாதிக்க சோனியா வலியுறுத்தல்

Updated : டிச 10, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (10+ 20)
Share
Advertisement
புதுடில்லி:தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு, பார்லிமென்ட் நடவடிக்கைகளை காங்கிரஸ் முடக்கி வரும் நிலையில், ''பார்லிமென்டில்பேசுவதற்கு எங்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரவில்லை. நாட்டின் பல முக்கிய பிரச்னைகள் குறித்து பார்லி.,யில்நாங்கள் கேள்வி எழுப்புவோம்,'' என அக்கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா கூறியுள்ளார்.பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது.
சோனியா... பூ சுற்றல்! முக்கிய பிரச்னைகள் ,பார்லி.வலியுறுத்தல்

புதுடில்லி:தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு, பார்லிமென்ட் நடவடிக்கைகளை காங்கிரஸ் முடக்கி வரும் நிலையில், ''பார்லிமென்டில்பேசுவதற்கு எங்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரவில்லை. நாட்டின் பல முக்கிய பிரச்னைகள் குறித்து பார்லி.,யில்நாங்கள் கேள்வி எழுப்புவோம்,'' என அக்கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா கூறியுள்ளார்.பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா, கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


போராட்டம்



இதற்கிடையே, கடந்த கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்ட காங்.,கைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட, 12 எம்.பி.,க்கள் இந்தக் கூட்டத் தொடர் முழுதும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பார்லி வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதையடுத்து காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், இரு சபைகளிலும் பிரச்னை எழுப்பி, கோஷமிட்டு, அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், பார்லி., அலுவல்கள் பெரும்பாலும் முடக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், காங்., தற்காலிக தலைவர் சோனியா தலைமையில் கட்சியின் பார்லிமென்ட் குழு கூட்டம், பார்லி., வளாகத்தில் நேற்று நடந்தது. இரண்டு சபைகளைச் சேர்ந்த கட்சியின் எம்.பி.,க்களும் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் சோனியா பேசியதாவது:
எல்லை தொடர்பான பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, விலைவாசி உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பு உட்பட நாட்டின் நலன் தொடர்பான பல சவால்கள் உள்ளன.இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பார்லிமென்டில் ஆரோக்கியமான விவாதம் நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. பார்லி.,யில் விவாதம் நடத்தினால் தான், ஒருமித்த முடிவு எடுக்க, பிரச்னைக்கு தீர்வு காண வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, எதிர்க்கட்சிகளின் கேள்விகளை சந்திக்க தயாராக இல்லை. ஆனால் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, அரசிடமிருந்து பதில்கள், விளக்கங்களை பெற வேண்டிய கடமை நமக்கு உள்ளது.மத்திய அரசு ஒருவழியாக விவசாய சட்டங்களை திரும்பப் பெற்று விட்டது.கடந்தாண்டு எவ்வித விவாதமும் இல்லாமல், இந்த சட்டங்களுக்கான மசோதா பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டது. அது தவறு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்கச் சொன்னால், ஓரளவுக்கு குறைத்துவிட்டு, மாநிலங்களின் மீது பொறுப்பை சுமத்தியுள்ளனர்.


பல்வேறு பிரச்னைகள்



விலைவாசி உயர்ந்து கொண்டே வருகிறது. அதைக் கட்டுப்படுத்தாமல் கோடிக் கணக்கில் செலவிட்டு, புதிய பார்லி மென்ட் வளாகம் கட்டி வருகின்றனர்.ரூபாய் நோட்டு செல்லாது என்று 2016ல் அறிவித்தனர். தற்போது, நாட்டின் சொத்துக்களை விற்று வருகின்றனர். இதை பொருளாதார மீட்பு நடவடிக்கை என்கின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் விஷயத்திலும் மோடி அரசு கோட்டை விட்டுள்ளது.நாட்டில் 60 சதவீத மக்களுக்கு, இந்தாண்டு இறுதிக்குள், இரண்டு 'டோஸ்' தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறினர். ஆனால், அதை எட்டுவதற்கு வாய்ப்பே இல்லை. இவ்வாறு நாட்டின் நலன் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து, பார்லி.,யில் விவாதிக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துவோம்.இவ்வாறு அவர் பேசினார்.


உண்மையான காங்கிரஸ்



மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., சார்பில் வெளியாகும், 'ஜகோ பங்களா' இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:பா.ஜ.,வுக்கு எதிரான போரில் திரிணமுல் காங்., வென்று, மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. பா.ஜ., கக்கியுள்ள விஷம், பல மாநிலங்களுக்கு பரவியுள்ளது. அதை அழிக்கும் வகையில், அந்த மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் திரிணமுல் காங்., போட்டியிட்டு வருகிறது.
காங்., மிக முக்கியமான எதிர்க்கட்சி தான். ஆனால், போரில் தோல்வியடைந்து, சோர்ந்து, உட்கட்சி குழப்பத்தில் உள்ளது. அதனால், முக்கிய எதிர்க்கட்சியின் பொறுப்பை திரிணமுல் காங்., ஏற்றுள்ளது. திரிணமுல் காங்., தான் உண்மையான காங்கிரஸ்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10+ 20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
09-டிச-202117:59:35 IST Report Abuse
jayvee பாராளுமன்றத்தில் விவாதிக்கணுமா ?பேசாம போவியா
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
09-டிச-202117:46:51 IST Report Abuse
S. Bharani முதலில் முக்கிய பிரச்சனை காங்கிரஸ் கட்சியில் தலைவர் என்று ஒருவர் கூட இல்லை என்பது தான்
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
09-டிச-202113:59:24 IST Report Abuse
Loganathan Kuttuva கொரோனா தடுப்பூசிக்கு எதிராக காங்கிரஸ் முன்பு பேசியது எவ்வளவு தப்பு என்று இவருக்கு தெரியவில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X