சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஹெலிகாப்டர் விபத்து: முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் பலி

Updated : டிச 09, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (26+ 168)
Share
Advertisement
குன்னுார் : நீலகிரி மாவட்டம், குன்னுார் மலை பகுதியில், நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் சென்ற ராணுவ ஹெலிகாப்டர், பயங்கர விபத்தில் சிக்கியது. மரத்தில் மோதிய வேகத்தில், சட்டென தீப்பிடித்து எரிந்ததில், ராவத், அவர் மனைவி உட்பட 13 பேர் பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அதிகாரி மட்டும் உயிருக்கு ஆபத்தான
RIPBipin Rawat,CDS,Bipin Rawat,Helicopter Accident

குன்னுார் : நீலகிரி மாவட்டம், குன்னுார் மலை பகுதியில், நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் சென்ற ராணுவ ஹெலிகாப்டர், பயங்கர விபத்தில் சிக்கியது. மரத்தில் மோதிய வேகத்தில், சட்டென தீப்பிடித்து எரிந்ததில், ராவத், அவர் மனைவி உட்பட 13 பேர் பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அதிகாரி மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். நாட்டுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தி உள்ள ராவத்தின் மறைவு, விபத்து எனக் கருதப்பட்டாலும், எதிரி நாடுகளின் மிகப் பெரிய சதி திட்டமாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என, நாடு முழுதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


latest tamil news
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டனில் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லுாரி உள்ளது. நம் நாடு உட்பட, 46 நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் 430 பேர், இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.ராணுவ பயிற்சி கல்லுாரியில், கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், 63, அவரது மனைவி மதுலிகா ராவத்.
பிரிகேடியர் எல்.எஸ். லிடர், லெப்.கர்னல் ஹர்ஜிந்தர் சிங் மற்றும் அதிகாரிகள், குருசேவக், ஜிதேந்திர குமார், நாயக் விவேக் குமார், சாய் தேஜா, ஹவில்தார் சட்பல் உட்பட 14 பேர், கோவை சூலுார் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை, 11:47 மணிக்கு, எம்.ஐ., -17வி5 ரக ஹெலிகாப்டரில் வெலிங்டன் புறப்பட்டனர்.


குன்னுாரில் நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. பகல் 12:00 மணியளவில், நீலகிரி மலைப்பகுதி காட்டேரி பூங்கா அருகே நஞ்சப்பாசத்திரம் பகுதியில், ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்துள்ளது. அப்போது பனிமூட்டம் காரணமாக, மரங்களில் மோதியது. இதில், ஹெலிகாப்டர் வெடித்து தீப்பிடித்தது. பயங்கர சப்தம் கேட்டு, வீடுகளில் இருந்து வெளியே வந்த மக்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். நீண்ட நேரம் தீ எரிந்து கொண்டிருந்தது.


latest tamil news
பகல் 12:20 மணிக்கு சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்தனர். கருகிய நிலையில் வெளியில் கிடந்த நான்கு உடல்கள் மீட்கப்பட்டன.எரிந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர், இருமுறை பயங்கர சப்தத்துடன் மீண்டும் வெடித்தது. ராணுவ அதிகாரிகளின் உடல்கள் எரிந்து, கரி கட்டையாக சிதறிக் கிடந்தன. ராணுவ பயிற்சி கல்லுாரி கமாண்டன்ட் கோலன், எம்.ஆர்.சி., கமாண்டன்ட் ராஜேஷ்வர் சிங், வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி கலெக்டர் அம்ரித் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். தொடர்ந்து ராணுவத்தினர், தீயணைப்பு துறையினர், போலீசார், பொதுமக்கள் சேர்ந்து உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கடும் மேகமூட்டம் நிலவியதாலும், நெருப்பின் புகை காரணமாகவும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

உள்ளூர் மக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சி நடந்தது. மாலை 3:30 மணிக்கு முழுமையாக தீ அணைக்கப்பட்டு, அனைத்து உடல்களும் மீட்கப்பட்டன. குன்னுார் வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டன. இந்த விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர். ஒருவர் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


கிடைத்தது கருப்பு பெட்டிஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதி முழுதும் ராணுவ வீரர்கள், போலீசார் கட்டுப்பாட்டுக்குள், நேற்று மாலை 3:00 மணி முதல் கொண்டு வரப்பட்டது. பின், ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை தேடும் பணி நடந்தது. ஆனால் மாலை 5:00 மணி வரை, தீயின் வெப்பம் இருந்ததால், அதன் அருகே யாரும் செல்ல முடியவில்லை. அங்கிருந்த மரங்களும் எரிந்ததால், அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மாலை 5:30 மணிக்கு கருப்பு பெட்டியை ராணுவத்தினர் மீட்டனர். அதில் உள்ள பதிவுகளை ஆராய்ந்த பின் தான், விபத்துக்கான முழு விபரம் தெரியவரும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.


மீட்க முடியாதது ஏன்?தலைமை தளபதி பிபின் ராவத் வருகை காரணமாக, 'ஜிம்கானா' மைதானத்தில் அவர் வரும் ராணுவ ஹெலிகாப்டர் இறங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. அவசர தேவையை கருத்தில் கொண்டு, தீயணைப்பு துறையினர் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர். விபத்து நடந்த தகவல் அறிந்ததும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் ராமச்சந்திரன், குமார் ஆகியோர் கூறுகையில், 'எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன், அப்பகுதிக்கு சென்றோம். அங்கு இருவர், 60 சதவீத தீக்காயங்களுடன் இருந்தனர். 'உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினோம். ஹெலிகாப்டர் எரிந்து கொண்டிருந்ததால் யாரையும் மீட்க இயலவில்லை' என்றனர்.


விபத்தில் தப்பிய வருண் சிங்குரூப் கேப்டன் வருண் சிங், காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். வருண் சிங்குக்கு, 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடநத ஆண்டு, தேஜஸ் ரக போர் விமானத்தை இயக்கியபோது, நடுவானில் அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.ஆனால் சூழ்நிலையை திறம்பட கையாண்ட வருண் சிங், அதை பத்திரமாக தரையிறக்கினார். அவருடைய தீர செயலுக்காக, இந்தாண்டு ஆக.,ல் அவருக்கு 'ஷௌரிய சக்ரா' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.


ரஷ்ய ஹெலிகாப்டர்-விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர் எம்.ஐ., - 17 வி5 ரகம். ரஷ்யாவின் ஹசான் ஹெலிகாப்டர் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 4.5 டன் எடை வரை சரக்குகளை கையாளும் திறன் கொண்டது. உலகின் அதிநவீன போக்குவரத்து ஹெலிகாப்டராகவும் உள்ளது.மணிக்கு 260 கி.மீ., வேகத்தில் செல்லும். தேடுதல் மற்றும் மீட்பு பணிக்காக இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது. கடும் பனி மூட்டம், மழை, வெயில் என, எல்லா காலநிலையிலும் சிறப்பாக செயல்பட கூடியது. இதனால், குன்னுார் அருகே நடந்த விபத்து, ராணுவ வட்டாரங்களில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது. விபத்தின் பின்னணியில், எதிரிகளின் சதி இருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்க உள்ளது.


பிரதமர் தலைமையில் கேபினட் கமிட்டி கூட்டம்ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட வீரர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ராணுவ கேபினட் கமிட்டி கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், ராணுவ கேபினட் கமிட்டி கூட்டம் டில்லியில் நேற்று மாலை நடந்தது. இதில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா, கேபினட் செயலர் ராஜிவ் கவுபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் அகால மரணத்துக்கு காரணமான ஹெலிகாப்டர் விபத்து குறித்து, ராணுவ கேபினட் கமிட்டி உறுப்பினர்களுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, பிபின் ராவத்தின் இறுதி சடங்கு, டில்லியில் இன்று நடக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (26+ 168)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
09-டிச-202121:48:22 IST Report Abuse
Vittalanand அதிக ஆசை அதிக நஷ்டம் அரசியல் அமைப்பு சட்டப்படி முப்படைகளுக்கும் தலைவர் ஜனாதிபதியே.
Rate this:
Cancel
09-டிச-202118:43:48 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K ஒரு தலை சிறந்த முப்படை தளபதியாக திகழ்ந்திருக்கிறார் பிபின் ராவத் அவர்கள். அன்னாரது மறைவுக்கும், அவருடைய மனைவி மற்றும் அவர்களுடன் பயணித்த ராணுவ அதிகாரிகளின் மறைவுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். 😢😢😢
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
09-டிச-202118:39:15 IST Report Abuse
THINAKAREN KARAMANI அரிய, மதிப்பு மிக்க உயிர்களை இழந்த, நமது தேசம் காத்த வீரப்பெருமகன்களுக்கு எனது வீரவணக்கம். அனைவரின் ஆத்மாக்கள் சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X