சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூலூர் முதல் குன்னூர் வரை... நடந்தது என்ன?

Updated : டிச 10, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
* நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே விபத்துக்குள்ளான விமானப்படை ஹெலிகாப்டரில், 14 பேர் பயணம் செய்தனர்; 13 பேர் இறந்தனர்* காலை, 11:47 மணிக்கு சூலுாரில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டது. மதியம் 12:10 மணிக்கு விபத்து நடந்துள்ளது* ஹெலிகாப்டர் இறங்க வேண்டிய இடமான வெலிங்டனில் இருந்து 9 கி.மீ., தொலைவில் விபத்து ஏற்பட்டுள்ளது * நஞ்சப்பா சத்திரம் பகுதியில் விமானம் விழுந்தவுடன்,
RIPBipin Rawat,CDS,Bipin Rawat,Helicopter Accident

* நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே விபத்துக்குள்ளான விமானப்படை ஹெலிகாப்டரில், 14 பேர் பயணம் செய்தனர்; 13 பேர் இறந்தனர்
* காலை, 11:47 மணிக்கு சூலுாரில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டது. மதியம் 12:10 மணிக்கு விபத்து நடந்துள்ளது


* ஹெலிகாப்டர் இறங்க வேண்டிய இடமான வெலிங்டனில் இருந்து 9 கி.மீ., தொலைவில் விபத்து ஏற்பட்டுள்ளது


* நஞ்சப்பா சத்திரம் பகுதியில் விமானம் விழுந்தவுடன், யாரும் அருகில் நெருங்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய தீப்பிழம்பு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த சிலர் பயந்து ஓடினர்


* தீப்பிடித்து நீண்ட நேரமாகியும் ஹெலிகாப்டர் பற்றி எரிந்து கொண்டிருந்தது. அப்பகுதியில் முழுமையாக தீயை அணைப்பதற்கு நான்கு மணி நேரத்துக்கு மேல் ஆனது


* மதியம் 1:00 மணிக்கு உடல்களை மீட்கும் பணி துவக்கப்பட்டு, மாலை 3:30 மணிக்கு முடிந்தது அதில், 13 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது; ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்


* விபத்தில் இறந்தவர்கள் உடல்கள், வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு மக்கள் திரண்டனர்
* இந்த சம்பவத்தால், குன்னுார் ராணுவ வெலிங்டன் பயிற்சி மையம், ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லுாரியில் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்


* ஹெலிகாப்டரில் இருந்த கருப்பு பெட்டி, நீண்ட நேர தேடுதலுக்கு பின், 5:00 மணிக்கு கிடைத்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

* விபத்தில் இறந்த முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட, இறந்த 13 பேரின் உடல்களை, டில்லிக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகளில் ராணுவ குழுவினர் ஈடுபட்டுள்ளனர்


* கோவை சூலுாரில் இருந்து, ராணுவ அதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டருடன், பாதுகாப்புக்காக மேலும் இரு ஹெலிகாப்டர்கள் வந்ததாகவும், பனிமூட்டம் காரணமாக, அந்த இரு ஹெலிகாப்டர்கள் கோவை திரும்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.


latest tamil news




பிபின் ராவத்: முதல் முப்படை தலைமை தளபதி


இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியானவர் ஜெனரல் பிபின் ராவத், 63.

* இவரது தந்தை லக் ஷ்மண் சிங் ராவத் ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக இருந்தார்.

* ராஜ்புத் இனத்தை சேர்ந்த இவருக்கும், தமிழகத்திற்கும் பல விதங்களில் தொடர்பு உள்ளது.

* நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லுாரியில் பட்டம் பெற்றவர்.

* சென்னை பல்கலையில், நிர்வாகவியல், கம்ப்யூட்டர் கல்வியில், டிப்ளமோ பட்டம் பெற்றவர்.

* டிச.,16, 1978 ல் ராணுவத்தின் கூர்க்கா ரைபிள்ஸ் படைப்பிரிவில் சேர்ந்தார். இந்த படைப்பிரிவில் தான், பிபின் ராவத் தந்தையும் பணி புரிந்தார்.

* கேப்டன், மேஜர், லெப்டினன்ட், கர்னல், பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என பதவி உயர்வு பெற்ற இவர், 2017 ஜன., 1ல் ராணுவ தளபதி ஆனார்.

* பிபின் ராவத்தின் 37 ஆண்டு கால சிறப்பான செயல்பாடுகளால், மத்திய அரசு இவரை முப்படை தலைமை தளபதியாக 2020 ஜன., 1ல் நியமித்தது. இவரின் மனைவி மதுலிகா. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.


டில்லி முதல் காட்டேரி வரை...


* டில்லியில் இருந்து சிறப்பு விமானம் நேற்று காலை 9:00 மணிக்கு புறப்பட்டது.

* அதில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட ஒன்பது பேர் பயணித்தனர்.

* கோவை சூலுாரில் உள்ள விமானப் படை தளத்துக்கு பகல் 11:35 மணிக்கு சிறப்பு விமானம் வந்தடைந்தது.

* அங்கிருந்து விமானப் படைக்கு சொந்தமான, 'எம்.ஐ., --- 17 வி5' ஹெலிகாப்டர் பகல் 11:45 மணிக்கு புறப்பட்டது.

* அதில், பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணித்தனர்.

* குன்னுார் அருகே உள்ள காட்டேரி மலை முகட்டில் பகல் 12:20க்கு மோதிய ஹெலிகாப்டர், நஞ்சப்பா சத்திரம் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது.

* சூலுார் விமானப் படை தளத்தில் இருந்து விபத்து நடந்த இடம் 94 கி.மீ., தொலைவில் உள்ளது.

* விபத்து நடந்த இடத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ முகாம் 16 கி.மீ., தொலைவில் உள்ளது.
* விபத்து தவிர்க்கப்பட்டு இருந்தால், ஹெலிகாப்டர் 5 நிமிடத்தில் வெலிங்டன் ராணுவ முகாமை சென்றடைந்திருக்கும்.


ராவத்தின் சமீபத்திய பேச்சு



சீனா அச்சுறுத்தல்


இந்தியாவின் பாதுகாப்புக்கு பாகிஸ்தானை விட சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இமயமலை பகுதிகளில் எல்லையை பாதுகாக்க அனுப்பப்பட்ட வீரர்களால் இன்னும் முகாமிற்கு திரும்ப முடியவில்லை. இரு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லை பிரச்னையை தீர்ப்பதற்கு நம்பிக்கையின்மை, சந்தேகம் அதிகரித்தல் போன்றவை தடையாக உள்ளன.

-நவ., 12, 2021




தலிபானுக்கு எச்சரிக்கை


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. இது, இந்தியாவின் பாதுகாப்புக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாத குழுக்களுக்கு தலிபான்கள் உதவலாம் எனத் தெரிகிறது. வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் ராணுவத்தை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் பயங்கரவாத செயல் நடத்தப்பட்டால், அது இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும்.

-நவ., 12, 2021



'சைபர்' தாக்குதல்


சீனாவில், புதிய தொழில்நுட்பங்களுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சைபர் தொழில்நுட்பத்தில் சீனா இந்தியாவை விட சற்று முன்னணியில் இருப்பது உண்மை தான். நம் நாட்டின் மீது சைபர் தாக்குதல் நடத்தும் வல்லமை சீனாவுக்கு உள்ளது. எனவே, இந்த விஷயத்தில் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறோம்.

-ஏப்., 8, 2021


சீனாவுடன் போர்


கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலையடுத்து இரு நாட்டு படைகளும் எல்லையில் தளவாடங்களையும், துருப்புகளையும் குவித்து வருகின்றன. இருநாடுகளும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இப்பேச்சுவார்த்தை தோல்வியடையுமானால் சீனாவுடன் போர் புரிய இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது.

-ஆக., 24, 2020


அமைச்சர் அதிர்ச்சி


முப்படை தளபதி பிபின் ராவத் வருகை தந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான தகவல் கேட்டு, முதல்வர் அறிவுறுத்தலின்படி, கலெக்டருடன் வந்து பார்வையிட்டேன். முதல் ஒரு மணி நேரத்தில், நான்கு பேர் இறந்தது தெரியவந்தது. இருவர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டனர். அதன்பின், பலர் இறந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

- ராமச்சந்திரன், மாநில வனத்துறை அமைச்சர்




மரத்தில் மோதி பயங்கர சப்தம்


குன்னுார் நஞ்சப்பா சத்திரம் குடியிருப்புகள் அருகே 100 மீட்டர் தொலைவில் ஹெலிகாப்டர் விழுந்தது. அப்போது மரத்தில் மோதி பயங்கர சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தோம். பனிமூட்டம் அதிகமாக இருந்தது. எனினும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது தெளிவாக தெரிந்தது. இங்குள்ள மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அங்கு கருகிய நிலையில் கிடந்த உடல்களை பார்த்தோம்.

- சரண்யா, 50, நஞ்சப்பாசத்திரம், குன்னுார்




'உடல்கள் எரிந்து விழுந்தன'


நஞ்சப்பா சத்திரம் பகுதியில், குழாய் பைப் கட்டிவிட்டு திரும்பினேன். அப்போது 12:00 மணிக்கு மேல் இருக்கும். ஹெலிகாப்டர் சப்தம் கேட்டது. அடுத்த வினாடி நெருப்பு பிடித்து விழுந்து வெடித்த சத்தம் கேட்டது. புகை, நெருப்பு ஆகியவற்றுடன் உடல்கள் தீப்பிடித்து கீழே விழுந்ததை பார்த்தேன். மக்கள் உதவியுடன் போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தேன்.

கிருஷ்ணசாமி, 68, நஞ்சப்பாசத்திரம், குன்னுார்.


பயங்கர சத்தம் கேட்டுச்சு!


நானும், நண்பரும் வீட்டு முன் நின்றிருந்தோம். சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் எங்கள் வீடு உள்ளது. திடீரென்று பயங்கரமான சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தோம். புகை மண்டலமாக நெருப்பு எரிந்து கொண்டு இருந்தது. மரமே தெரியாத அளவுக்கு பனி அதிகளவில் இருந்தது. உடனடியாக தீயணைப்பு, காவல் துறைக்கு தகவல் அளித்தோம்; அவர்களும் விரைந்து வந்தனர்.

-சந்திரகுமார், 48, நஞ்சப்பாசத்திரம், குன்னுார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-டிச-202107:32:05 IST Report Abuse
Kasimani Baskaran இவ்வளவு குறைவான உயரத்தில் பறந்தது ஏன் என்பதுதான் புரியவில்லை. ஏதாவது கோளாறு ஏற்பட்டு இருக்கலாம்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-டிச-202105:24:12 IST Report Abuse
J.V. Iyer சூலுாரில் புதிதாக சேர்ந்து கொண்டவர்கள் யார், யார்?
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
09-டிச-202103:16:03 IST Report Abuse
BASKAR TETCHANA பிபின் ராவத் இறப்புக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X