பொது செய்தி

இந்தியா

பிபின் ராவத் மறைவு; தமிழக தலைவர்கள் இரங்கல்

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை-முப்படைகளின் முதல் தலைமை தளபதி மறைவுக்கு தமிழக தலைர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, .தமிழக கவர்னர் ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ; தலைமை தளபதி பிபின் லக்ஷ்மண் ராவத், இந்திய ராணுவத்தின் 26வது தலைமை தளபதியாக பணியாற்றியவர். நாட்டுக்கு, 43 ஆண்டுகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் நாட்டுக்கு சேவையாற்றி உள்ளார்.அவரது பாதுகாப்பு
பிபின் ராவத், மறைவு, தமிழக தலைவர்கள், இரங்கல்

சென்னை-முப்படைகளின் முதல் தலைமை தளபதி மறைவுக்கு தமிழக தலைர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, .

தமிழக கவர்னர் ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ; தலைமை தளபதி பிபின் லக்ஷ்மண் ராவத், இந்திய ராணுவத்தின் 26வது தலைமை தளபதியாக பணியாற்றியவர். நாட்டுக்கு, 43 ஆண்டுகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் நாட்டுக்கு சேவையாற்றி உள்ளார்.அவரது பாதுகாப்பு உத்திகள், தொழில்முறை புத்திசாலித்தனம், சமீப காலங்களில் வெளிப்புற ஆக்கிரமிப்புகளை சமாளிக்க, இந்தியாவுக்கு உதவியாக இருந்தன.


latest tamil newsஅவரது தலைமை, பரந்த அனுபவம், புதுமையான யோசனைகள், பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்த உதவியது. உள்நாட்டிலும், வெளியிலும் சவால்களை சந்திக்கும் வகையில், முப்படைகளையும் ஒருங்கிணைத்து பலப்படுத்தினார்.அவரது மறைவு இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. இந்தியா தன் வீரமிக்க மகனை இழந்து உள்ளது.இவ்வாறு கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்


latest tamil newsமுதல்வர் ஸ்டாலின்

இந்தியாவின் முப்படைகளின் முதல் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் 11 ராணுவ வீரர்கள், குன்னுாரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த செய்தி அறிந்து, மிகுந்த வருத்தம் அடைந்தேன். ஈடுசெய்ய முடியாத இழப்பில், தேசத்துடன் இணைந்து இரங்கல் தெரிவிப்பதோடு, உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்


latest tamil newsஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி

பிபின் ராவத் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இருவரும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அஞ்சா நெஞ்சமும், அளவில்லா வீரமும் கொண்ட தேச பக்தர். அவருடன் பயணித்த நம் ராணுவத்தின் மூத்த அதிகாரிகளும் தேசத்தின் பாதுகாப்பிற்காக தங்களை அர்ப்பணித்துப் பணியாற்றிய வீரர் பெருமக்களின் மரணம் தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

விபத்தில் உயிரிழந்திருக்கும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். அவர்களின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். உயிரிழந்தோர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்” . இவ்வாறு இரங்கல் செய்தியில் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
09-டிச-202118:15:00 IST Report Abuse
jayvee வழக்கம்போல, சீன அடிமைகள் மௌனம். தமிழ் தீவிரவாதிகள் மௌனம், ஸ்டாலினிக்கு CM என்பதால் நிர்பந்தம்
Rate this:
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
09-டிச-202103:53:40 IST Report Abuse
Bharathi பிபின் ராவத் காஷ்மீர் வட கிழக்கு மாநிலங்களுக்கெல்லாம் சென்று இருக்கிறார் ஒன்றும் ஆகவில்லை. இங்க விடியல் ஆட்சி பக்கத்துல கம்மிகள் ஆட்சி அசம்பாவிதம் நடக்குது. இதுலே தெரியலையா தேச விரோதிகளுக்கு யாரு பாதுகாப்பா இருக்காங்கன்னு.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
09-டிச-202102:50:05 IST Report Abuse
Ramesh Sargam ஒரு சில அரசியல்வாதிகள் இறந்த அந்த வீரருக்கு இரங்கல் தெரிவிக்க கூட தகுதியற்றவர்கள். அவர் நாட்டிற்காக எவ்வளவோ செய்தார். ஆனால் இந்த அரசியல்வாதிகள், என்ன செய்தார்கள், நாட்டின் சொத்தை சுருட்டுவதைத்தவிர...??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X