இந்தியா

விவசாயிகள் போராட்டம் வாபசா :இன்று மீண்டும் ஆலோசனை

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: தங்களுடைய கோரிக்கைகளை ஏற்பது குறித்து மத்திய அரசு அனுப்பியுள்ள புதிய திட்டங்களை ஏற்பது குறித்து ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்.போராட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து இன்று பகலில் கூட முடிவெடுக்க உள்ளதாக சம்யுக்த கிஷான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் உள்ளிட்ட சில மாநில விவசாயிகள் டில்லி எல்லையில்
 விவசாயிகள் போராட்டம் வாபசா :இன்று மீண்டும் ஆலோசனை

புதுடில்லி: தங்களுடைய கோரிக்கைகளை ஏற்பது குறித்து மத்திய அரசு அனுப்பியுள்ள புதிய திட்டங்களை ஏற்பது குறித்து ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்.
போராட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து இன்று பகலில் கூட முடிவெடுக்க உள்ளதாக சம்யுக்த கிஷான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் உள்ளிட்ட சில மாநில விவசாயிகள் டில்லி எல்லையில் ஓராண்டுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்று அந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதற்கான மசோதா பார்லியில் நிறைவேறியது.


latest tamil newsகுறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவற்றை ஏற்பது குறித்து மத்திய அரசு சமீபத்தில் தன் திட்டத்தை அனுப்பி வைத்தது.அதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்கள் வலியுறுத்தின.
அதையடுத்து புதிய திட்டத்தை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அது குறித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சக்யுக்த கிஷான் மோர்ச்சா பிரதிநிதிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இது குறித்து அதன் மூத்த உறுப்பினர் குர்னாம் சிங் சாதுனி கூறியதாவது:மத்திய அரசு அனுப்பியுள்ள புதிய திட்டத்தை ஏற்பது என ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். போராட்டத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக இன்று மீண்டும் கூடி பேச உள்ளோம்.
எங்கள் கோரிக்கைகளை ஏற்பது தொடர்பாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக 'லெட்டர் ஹெட்'டில் எழுத்துபூர்வமாக அனுப்பிய பிறகு போராட்டத்தை கைவிடுவது குறித்து முடிவெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
09-டிச-202113:10:53 IST Report Abuse
Thiagarajan Kodandaraman வெட்டி முந்துங்கள் நாட்டின் அவமானம் உங்களது செயல் ..உங்களை காப்பாற்றி கொண்டிருந்த முக்கிய அதி காரிகள் பெரும் தலைகள் நாமிழந்துவிட்டோம் ..எவனிடமோ வாங்கி கொண்டிருக்கும் காசுக்கள இப்போதாவது தூக்கி எரிந்து விட்டு வீடு திரும்புங்கள்
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
09-டிச-202110:49:57 IST Report Abuse
Anand இந்த போலிகள் அராஜகம் செய்யுமிடத்தில் பூகம்பம் ஏதும் ஏற்படாதா?
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
09-டிச-202109:57:46 IST Report Abuse
Lion Drsekar ஒவ்வொரு ஆணுக்கு பின் ஒரு பெண் என்பார்கள் அதுபோல் எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் பின்புலம் இல்லாமல் யாரும் எதுவுமே செய்ய முடியாது அப்படி இருக்க... இபோது ஒரு புறம் இருக்கட்டும், இன்றைக்கு அரசாங்கம் என்பது ஒரு வியாபாரமாகிப் போனது எதனால்? மக்கள் பிரநிதிகளின் மற்றும் அவர்கள் சார்ந்த ஊழியர்களின் தேவைகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. நாடு முழுவதும் வீரப்படண்டிய கட்டபொம்மன்கள் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு பல பிரச்சனைகள் வரிகளால் அவதியுறுகின்றனர். மக்களுக்கென்று ஒரு அமைப்பு இல்லாமல் போனதுதான் இதற்க்கு காரணம், குடும்பங்களுக்கு அமைப்புகள் இருக்கின்றன அவர்கள் கட்சி என்ற பெயரில் மக்களுக்கு சேவை செய்கின்றனர் பாராட்டுக்கள், வரும் வருமானத்திற்க்கேற்ப மட்டுமே செலவு செய்வது போக, இவர்களது செலவுக்கு வாரிப்போட ஆரம்பித்துவிட்டது வருத்தம் அளிக்கிறது. நேர்மையாக வரிகட்டுபவர்கள் மற்றும் பின்புலம் இல்லாதவர்கள் மட்டுமே சட்டத்துக்கு பயந்து அடிமையாக வாழவேண்டிய ஒரு நிலை. நமக்கு உணவளிக்கும் உண்மையான விவசாயிகளுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருப்பது உலகறியும், அவர்கள் இல்லையென்றால் நாம் இல்லை, இருந்தாலும் உச்சநீதி மன்றத்தையே எதிர்த்து போராடும் அளவுக்கு பின்புலம் இருப்பது போல் நல்லவர்களுக்கும் இதே போன்ற அமைப்பு இருந்தால் நாடு வளம்பெறும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X