பொது செய்தி

தமிழ்நாடு

திருச்சி மதுரையில் உயர்மட்ட சாலை அமைக்க ஒப்புதல்

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை-திருச்சி மற்றும் மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், உயர்மட்ட சாலை அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும், பணிகளை துவக்கவும், தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.'திருச்சியில், தலைமை தபால் நிலையத்தில் இருந்து நீதிமன்ற ரவுண்டானா வரை; ஓடத்துறை காவிரி பாலம் முதல் மல்லாட்சிபுரம் வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.'மதுரையில், விமான

சென்னை-திருச்சி மற்றும் மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், உயர்மட்ட சாலை அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும், பணிகளை துவக்கவும், தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.latest tamil news


'திருச்சியில், தலைமை தபால் நிலையத்தில் இருந்து நீதிமன்ற ரவுண்டானா வரை; ஓடத்துறை காவிரி பாலம் முதல் மல்லாட்சிபுரம் வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.'மதுரையில், விமான நிலையத்துக்கு செல்லும் பயண நேரத்தை குறைக்கும் வகையில், நெல்பேட்டை முதல் அவனியாபுரம் புறவழிச்சாலை சந்திப்பு வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும்' என, சட்டசபையில் மானிய கோரிக்கையின்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அறிவித்தார்.


latest tamil news


இதைத் தொடர்ந்து, திருச்சியில், 1.24 கோடி ரூபாயிலும்; மதுரையில், 1.56 கோடி ரூபாயிலும், உயர்மட்ட சாலை அமைக்க திட்டமிடப் பட்டது. இதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் கோரி, நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர், அரசுக்கு கடிதம் எழுதினார்.அதை பரிசீலனை செய்த அரசு, இரண்டு நகரிலும், உயர்மட்ட சாலைகள் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ஒப்புதல் வழங்கியதுடன், நடப்பு நிதியாண்டில் அப்பணிகளுக்கு, 1.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிட்டுஉள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.ANBARASAN - muscat,ஓமன்
09-டிச-202115:50:48 IST Report Abuse
K.ANBARASAN தவறான மதிப்பீடு. நெல்பேட்டையிலிருந்து அவனியாபுரம் வரை 1.56 கோடி போதவே போதாது . கிட்டத்தட்ட 7 கி மீ தொலைவுக்கு 1.56 கோடியா ..
Rate this:
Cancel
Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ
09-டிச-202111:15:41 IST Report Abuse
Unmai Vilambi திருச்சியில் அதிகம் டிராபிக் இருக்கின்ற இடம் உறையூர், பாலக்கரை, மார்க்கெட், பட்டாபிராம் சாலை, தென்னுர் சாலை. மிகவும் கம்மியாக டிராபிக் உள்ள சாலை போஸ்ட் ஆபீஸ் ரவுண்டானா விலிருந்து கண்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷன் (கோர்ட் அருகில்) . இந்த இடத்திற்கு எதற்கு மேம்பாலம்?
Rate this:
Anand - chennai,இந்தியா
09-டிச-202113:24:23 IST Report Abuse
Anandஅப்பத்தான் கொள்ளையடிக்க முடியும்.......
Rate this:
Karthik - Dindigul,இந்தியா
09-டிச-202114:04:18 IST Report Abuse
Karthikபாலம் கட்டுவது மக்களுக்காக இல்லை. இவர்கள் (தி.மு.க) கல்லா கட்டுவதற்குத்தான். இதுதான் அவர்களின் ஆட்சி வரலாற்றின் பெருமை....
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மரக்கடை, பாலக்கரை, போஸ்ட் ஆபீஸ், ஜங்க்ஷன் வரை என்றார்கள் எனவே போஸ்ட் ஆபீஸ் ரவுண்டானா விலிருந்து கண்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷன் (கோர்ட் அருகில்) இந்த இடத்திற்கு சம்பந்தமேயில்லையே...
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
09-டிச-202109:14:24 IST Report Abuse
தமிழன் சேலம் சென்னை விரிவாக்க சாலை என்னாச்சு? பெங்களூரு மைசூர் விரிவாக்க சாலையின் முன்னேற்றங்களை youtube ல் காண்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X