கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவிலில் அறங்காவலர்கள்; நியமிக்க அரசு நடவடிக்கை

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை--தமிழகத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோவில்களுக்கு, விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் விஜய வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக, பாபுராயன்பேட்டையில் உள்ள, 250 ஏக்கர் நிலத்தை, ஏலம் வாயிலாக குத்தகைக்கு விட, நவம்பர் 24ல் அறிவிப்பு

சென்னை--தமிழகத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோவில்களுக்கு, விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.latest tamil news


செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் விஜய வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக, பாபுராயன்பேட்டையில் உள்ள, 250 ஏக்கர் நிலத்தை, ஏலம் வாயிலாக குத்தகைக்கு விட, நவம்பர் 24ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதை எதிர்த்து, வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.என். பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.


latest tamil news


அப்போது, 'அறங்காவலர்கள் இல்லாத நிலையில், கோவில் சொத்துக்களை ஏலம் விடக் கூடாது' என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.தமிழக அரசு தரப்பில், தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோவில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர்,'' என தெரிவித்தார்.'ஏல நடவடிக்கைகளை தொடர அனுமதி அளிக்கப்படுகிறது; ஏலத்தை இறுதி செய்யக் கூடாது' என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை, டிசம்பர் 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
09-டிச-202120:11:04 IST Report Abuse
rajan ஒரு அறங்காவலர் பதவிக்கு ஏழு லட்சம் பேரம் என்று தினமலரில் படித்ததாக நினைவு. சம்பளம் வெறும் 12 ஆயிரம். அப்படியானால் வெறும் சம்பளத்துக்காகவா ஏழு லட்சம் லஞ்சம் கொடுப்பான். மேல் வருமானம் எந்த வழியில் வரும் எப்படி எல்லாம் சுரண்டலாம் என்பதை கணக்கிட்டு பிறகுதானே பேரம் நடக்கும். ஆண்டவனுக்கே வெளிச்சம்.
Rate this:
Cancel
Nachiar - toronto,கனடா
09-டிச-202118:30:57 IST Report Abuse
Nachiar நரியின் கையில் கோழி கொடுக்கப்பட்டுள்ளது பாதுகாக்க. வோட்டை விற்று விடியல் வாங்கியவர்களுக்கு சேரட்டும் இந்த தோஷங்கள். இனிமேல் தான் தர்மம் யுத்தம் உக்கிரம்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
09-டிச-202110:02:34 IST Report Abuse
duruvasar வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு அறங்காவலர்களை நியமிக்க கோரி பெர்முடாவில் பெரும் போராட்டம் நடக்கிறதாமே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X