கோர்ட் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடை விற்பனை நேரம் மாற்றம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை-'டாஸ்மாக்' கடைகளில், மதுபான விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், டாஸ்மாக் மதுபான கடைகளின் வேலை நேரம் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இருந்தது. இந்த நேரத்தை, பகல் 12:00 முதல் இரவு 10:00 மணி வரை மாற்றி, கடந்த 2ம் தேதி டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை

சென்னை-'டாஸ்மாக்' கடைகளில், மதுபான விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


தமிழகத்தில், டாஸ்மாக் மதுபான கடைகளின் வேலை நேரம் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இருந்தது. இந்த நேரத்தை, பகல் 12:00 முதல் இரவு 10:00 மணி வரை மாற்றி, கடந்த 2ம் தேதி டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.


latest tamil news


அந்த மனுவில், 'இரவு 10:00 மணி என்பது, மக்கள் நடமாட்டம் குறைவான நேரம்; பணப்புழக்கம் அதிகம் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. 'எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரப்பட்டிருந்தது.மனுவை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், ஆறு வாரங்களில் பதில் அளிக்குமாறு, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
09-டிச-202120:05:06 IST Report Abuse
rajan எதுக்கு ஆறு வாரம் டைம்? ஒரு வாரம் போதாதா.
Rate this:
Cancel
Nachiar - toronto,கனடா
09-டிச-202118:41:12 IST Report Abuse
Nachiar தாயகத்துக்காக போரடி நேற்று மரணமடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிமித்தமாக நாளை அனைத்து டாஸ்மார்க் கடைகளும் மூடப்படுமா?
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
09-டிச-202112:47:35 IST Report Abuse
Thiagarajan Kodandaraman போன ஆட்சியின் பொது கனி அக்கா அந்த ஆட்சியை குடும்ப பெண்கள் மீது அதிக பாசம் உள்ளது போல் பேசி ஓட்டுக்களை வாங்கி இப்போது தூங்கி கொண்டு உள்ளாரா ..இப்போது யாருடைய வீட்டிலும் பெண்கள் மங்களகரமாக சந்தோசமாக உள்ளனரா சொல்ல முடியும் தலைவரின் புதல்வியே ...வெக்க கேடு உங்கள் தேர்தல் பிரச்சாரம் ...அசிங்கத்தின் உச்சக்கட்டம் அநியாய மாநிலம் குடிகாரர்களின் காசில் நாடு நடத்தினால் இன்னும் கேடுகள்தான் தொடரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X