திருமாவளவனுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்| Dinamalar

திருமாவளவனுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

Added : டிச 09, 2021 | கருத்துகள் (1) | |
மதுரை:வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில், வி.சி., தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.வழக்கறிஞர் ரத்தினம் தாக்கல் செய்த மனு:ஏழைகளுக்கு சட்ட உதவிகள் செய்கிறேன். விருத்தாசலம் அருகே இருவேறு சமூகத்தைச் சேர்ந்த கண்ணகி, முருகேசன் 2003ல் ஆணவக் கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தேன்.இந்த

மதுரை:வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில், வி.சி., தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் ரத்தினம் தாக்கல் செய்த மனு:ஏழைகளுக்கு சட்ட உதவிகள் செய்கிறேன். விருத்தாசலம் அருகே இருவேறு சமூகத்தைச் சேர்ந்த கண்ணகி, முருகேசன் 2003ல் ஆணவக் கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தேன்.
இந்த வழக்கில், கடலுார் நீதிமன்றம் சமீபத்தில் சிலருக்கு தண்டனை விதித்தது. வி.சி., கட்சியை சேர்ந்த சிலரால் எனக்கு அச்சுறுத்தல் உள்ளது.போலீஸ் பாதுகாப்பு மற்றும் துப்பாக்கி உரிமம் அளிக்கக் கோரி மத்திய - மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மத்திய - மாநில உள்துறை செயலர்கள், டி.ஜி.பி., மற்றும் வி.சி., பொதுச் செயலர் திருமாவளவன், துணை பொதுச் செயலர் வன்னியரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, டிசம்பர் 20க்கு ஒத்தி வைத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X