'கவனிப்பு' இருந்தால் கட்டட அனுமதி; தாம்பரம் மாநகராட்சியில் அடாவடி

Added : டிச 09, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
தாம்பரம் : தாம்பரம் மாநகராட்சியில், கட்டட அனுமதி பெற விண்ணப்பிக்கும் பொது மக்களை, நகரமைப்பு அலுவலர்கள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.சென்னை புறநகரில், புதிதாக உருவாகி உள்ள தாம்பரம் மாநகராட்சியுடன் இணைந்துள்ள பகுதிகள், ஏற்கனவே நகராட்சி, பேரூராட்சிகளாக இருந்தவை.அப்போது, நகராட்சிகளில் நகரமைப்பு அலுவலர்களும், பேரூராட்சிகளில் சி.எம்.டி.ஏ., திட்ட அதிகாரிகளும்

தாம்பரம் : தாம்பரம் மாநகராட்சியில், கட்டட அனுமதி பெற விண்ணப்பிக்கும் பொது மக்களை, நகரமைப்பு அலுவலர்கள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை புறநகரில், புதிதாக உருவாகி உள்ள தாம்பரம் மாநகராட்சியுடன் இணைந்துள்ள பகுதிகள், ஏற்கனவே நகராட்சி, பேரூராட்சிகளாக இருந்தவை.அப்போது, நகராட்சிகளில் நகரமைப்பு அலுவலர்களும், பேரூராட்சிகளில் சி.எம்.டி.ஏ., திட்ட அதிகாரிகளும் கட்டட அனுமதி விவகாரங்களில் பொதுமக்களை அலைக்கழித்து வந்தனர்.

மாநகராட்சியாக தரம் உயர்ந்த பின்பும், அதே நிலையே தொடர்கிறது. இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பொதுவாக, நகராட்சி, பேரூராட்சிகளில் கட்டட அனுமதி பெற, ஆன்லைனில் விண்ணப்பித்து, அந்த விண்ணப்பங்களை தபால் வழியாகவும் அனுப்ப வேண்டும்.அவற்றை நகராட்சிகளில் நகரமைப்பு பிரிவில் உள்ள அதிகாரிகளும், பேரூராட்சிகளில் சி.எம்.டி.ஏ., திட்ட அதிகாரிகளும் பரிசீலித்து, ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால், சம்பந்தப்பட்ட கட்டடங்களை, நேரடியாக ஆய்வு செய்து, தடையில்லா சான்றிதழ் வழங்குவர்.மாநகராட்சியாக தரம் உயர்ந்த பின், தாம்பரம் மாநகராட்சியின் தற்போதைய நகரமைப்பு அலுவலர்கள், சமீபகாலமாக ஆன்லைனில் விண்ணப்பித்து, தபாலில் அனுப்புவதற்கு முன், பொதுமக்கள் விண்ணப்பங்களுடன், தங்களை நேரில் வந்து சந்திக்குமாறு நிர்ப்பந்திக்கின்றனர்.ஆன்லைனின் விண்ணப்பிக்கும் போது, அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால், அதற்கேற்ப அனுமதி வழங்க தாமதப்படுத்தக் கூடாது எனவும், குறைகள் இருந்தால் அதை முறையாக சுட்டிக்காட்டி, அதற்கேற்ப மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும் என்ற விதியை மீறி, லாபம் பார்க்கவே அதிகாரிகள் இவ்வாறு செயல்படுகின்றனர்.

மேலும், அலுவலகம் வருபவர்களிடம், ஆவணங்களை ஆய்வு செய்யாமலேயே, கட்டுமானத்தின் மொத்த செலவினங்களை கேட்டு, அதற்கேற்ப லஞ்சம் கேட்கின்றனர்.மறுப்பவர்கள், ஆன்லைனின் விண்ணப்பித்து, தபாலில் விண்ணப்பங்களை அனுப்பினாலும், அவற்றை வேண்டுமென்றே அதிகாரிகள் நிராகரிக்கின்றனர்

.அதே நேரம், உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும், அதிகாரிகளை கவனிப்பவர்களுக்கு, அனைத்து பணிகளும் உடனடியாக முடித்துக் கொடுக்கப்படுகிறது.நகரமைப்பு பிரிவில், தலைவிரித்தாடும் இதுபோன்ற விதிமீறல், லஞ்ச லாவண்யத்திற்கு, உயர் அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
09-டிச-202107:25:52 IST Report Abuse
Bhaskaran பல்லாவரம் நகராட்சியில் அப்படிதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X