எந்த அதிகாரியும் தப்ப முடியாது: ஐகோர்ட் எச்சரிக்கை

Added : டிச 09, 2021 | |
Advertisement
சென்னை:'நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக வெறும் சம்பிரதாயத்திற்காக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருந்த; வேலை செய்யாத அதிகாரிகள் யாரும் தப்ப முடியாது; நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.தமிழகம் முழுதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள்

சென்னை:'நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக வெறும் சம்பிரதாயத்திற்காக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருந்த; வேலை செய்யாத அதிகாரிகள் யாரும் தப்ப முடியாது; நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. நீர்நிலைகளின் எண்ணிக்கை பரப்பளவு உள்ளிட்ட விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை செயலர் இறையன்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை:நீர் நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக 2020ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.அரசு புறம்போக்கு நிலங்களின் வழிகாட்டி மதிப்பீடு பூஜ்யம் என மாற்றப்பட்டுள்ளது.

நீர்நிலைகளை பதிவு செய்யக்கூடாது என பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி. நடவடிக்கை எடுத்து உள்ளார். நீர்நிலை கட்டுமானங்களுக்கு மின் இணைப்பு தரக்கூடாது; கட்டுமான திட்டங்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை அனுமதி அளிக்ககூடாது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.நீர்வள மேம்பாட்டுக்காக தனித்துறை உருவாக்கப் பட்டு உள்ளது.

ஆக்கிரமிப்புகள் இல்லாத நீர்நிலைகளை உருவாக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அனைத்து கலெக்டர்களுக்கும் ஜூலையில் உத்தரவிடப்பட்டுள்ளது.அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஆய்வு செய்து நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான புள்ளி விபரங்களை அனுப்ப வருவாய்துறை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மட்டுமல்லாமல் நீர்நிலைகளின் நீர் இருப்பு முன்பிருந்த நிலையில் பராமரிக்கவும் நடவடிக்கைகைள் எடுக்கப்பட்டுள்ளன.
சென்னையை பொறுத்தவரை நீர் நிலை ஆதாரங்களில் நீர் இருப்பு திறமையாக கையாளப் பட்டு மழை காலங்களில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: தலைமை செயலர் தாக்கல் செய்த அறிக்கையில் நீதிமன்றம் கோரிய எந்த விபரமும் இல்லை.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அனுமதித்த ஒரு அதிகாரி கூட தண்டனையில் இருந்து தப்ப முடியாது.எங்கு நீர் நிலை உள்ளது என தெரிந்தால் தான் ஆக்கிரமிப்புகள் இருக்கிறதா இல்லையா என கண்டறிய முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை நீர் நிலைகள் உள்ளன; அதன் சர்வே எண் அதன் பரப்பளவு உள்ளிட்ட விபரங்கள் கேட்கப்பட்டன.ஆனால் இந்த அறிக்கை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தோல்வியை காட்டுகிறது.

57 ஆயிரத்து 688 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் 8797 ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பிரதாயத்துக்காக இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரையும் மன்னிக்க முடியாது.

வேலை செய்யாமல் அறையில் உட்காரத்தான் சம்பளம் வழங்கப்படுகிறதா? தவறு செய்த அதிகாரிகள் நடவடிக்கையை சந்திக்க நேரிடும்.முதலில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக உத்தரவிடப்படும். இரண்டாவது முறையும் இது தொடர்ந்தால் ஊதியத்தை நிறுத்த உத்தரவிட நேரிடும். அதிகாரிகள் செய்யும் தவறுக்காக அரசை குறை கூற முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X