பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: தி.மு.க.,வின் இரு கோடுகள் தந்திரம்!

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (52)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எஸ்.சேகர், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:கோடு ஒன்றை அழிக்காமலேயே, சிறியதாக்க முடியுமா?முடியும் என்று, 1969ல் பாலசந்தர் இயக்கி வெளியான, இருகோடுகள் படத்தில் அதை நிரூபித்து காட்டப்பட்டிருக்கும். அதாவது, அந்த கோடு அருகில் அதைவிட பெரிய கோடு வரைந்தால்
தி.மு.க., தந்திரம், இது, உங்கள்,இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



எஸ்.சேகர், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

கோடு ஒன்றை அழிக்காமலேயே, சிறியதாக்க முடியுமா?முடியும் என்று, 1969ல் பாலசந்தர் இயக்கி வெளியான, இருகோடுகள் படத்தில் அதை நிரூபித்து காட்டப்பட்டிருக்கும். அதாவது, அந்த கோடு அருகில் அதைவிட பெரிய கோடு வரைந்தால் போதும். இந்த கோடு, சிறியதாக தெரியும்; அவ்வளவு தான்!

மக்களிடம், ஒரு பிரச்னையை மறக்க செய்ய வேண்டும் என்றால், அதைவிட, பெரிய பிரச்னையை ஏற்படுத்தினால் போதும் என்ற அரசியல் தத்துவம் தான், இருகோடுகள்.இப்போதைய தி.மு.க., அரசு அதை தான் செய்கிறது.வடகிழக்கு பருவ மழையில் தமிழகமே தத்தளித்து, விழி பிதுங்கி நிற்கிறது. சாலை, குடியிருப்பு, பொது இடம் என, எங்கும் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது; மக்கள் நிற்கதியாய் தவிக்கின்றனர்.

அரசு இயந்திரத்தை முடுக்கி, அதிரடி வேகம் காட்ட வேண்டிய ஆட்சியாளர்களோ, தேங்கியுள்ள நீர் பகுதியில் நின்றும், நடந்தும், டீ குடித்தும், 'செல்பி' எடுத்தும் விளம்பரம் தேடி கொள்கின்றனர்.தமிழக அரசு கஜானாவில் இருக்கும் நிதியில், மழை நிவாரண பணிகளை முடுக்கிவிடாமல், மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி காத்திருக்கிறது.அதேநேரம் பூங்கா, மணிமண்டபம், சமாதி போன்றவை கட்ட தாராளமாக செலவு செய்கிறது.எந்த பணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; எதை ஒத்திவைக்க வேண்டும் என்ற சாதாரண நிர்வாக நடைமுறை கூட தெரியாமல் அல்லது தெரியாதது மாதிரி முகமூடி அணிந்துள்ளனர்,


latest tamil news


தமிழக ஆட்சியாளர்கள்.மழையால் பாதிக்கப்பட்ட மக்கள், அதை மறக்க வேண்டும் என்பதற்காக, சித்திரை 1ம் தேதி கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டை, தை மாதம் 1ம் தேதிக்கு மாற்றி, தமிழக அரசு சித்து விளையாட்டில் இறங்கியுள்ளது.ஹிந்து பண்டிகை அனைத்தும், அரசு உத்தரவிட்டு கொண்டாடப்படுபவை அல்ல; அவை சூரியனின் நகர்வை கணக்கிட்டு நடப்பவை.ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய மமதையில், ஆணவத்தில் உத்தரவு போட்டால், அரசு சம்பளம் வாங்கும் அதிகாரிகள் வேண்டுமானால் கட்டுப்படலாம்; ஆனால் ஆதவனை, ஒன்றும் செய்ய முடியாது.'வெள்ள பாதிப்பு விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்பவே, தமிழ் புத்தாண்டு தேதியை, தி.மு.க.,வினர் கையில் எடுத்துள்ளனர்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சரியாகத் தான் கூறி இருக்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - Madurai,இந்தியா
10-டிச-202101:32:26 IST Report Abuse
தமிழன் திமுக ஒரே நேரத்தில் பல கோடுகளை போட்டு மக்களை குழப்பும் அதீத கபட கட்சி.
Rate this:
Cancel
10-டிச-202100:25:49 IST Report Abuse
theruvasagan தைமாசம் பிறக்கப்போகிற புத்தாண்டுக்கு என்ன பெயர் வைப்பாங்க. அப்ப போன சித்திரை மாதம் தொடங்கின பிலவ வருஷத்துக்கு 9 மாதங்கள்தானா. நினைச்சாலே கண்ண கட்டுதே
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
09-டிச-202120:00:03 IST Report Abuse
spr "மக்களிடம், ஒரு பிரச்னையை மறக்க செய்ய வேண்டும் என்றால், அதைவிட, பெரிய பிரச்னையை ஏற்படுத்தினால் போதும் என்ற அரசியல் தத்துவம் தான், இருகோடுகள்" இது அனைத்து தரப்பினருக்கும் பொருந்துமென்றாலும் அரசியல்வியாதிகளுக்கு மிகப் பொருத்தம் ஒரு பிரச்சினையை மக்கள் மறக்க மக்களை உசுப்பிவிடுவது போல இனம், ஜாதி மொழி மதம் என ஏதேனும் ஒரு வகையில் உணர்ச்சியைத் தூண்டும் மற்றுமொரு பிரச்சினையை உருவாக்க வேண்டும் அது மட்டுமல்ல பிரச்சினைகளை முழுவதுமாகத் தீர்க்காமல் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அரசியல்வியாதிகளின் ஆதரவு வேண்டுமென மக்களும் நினைப்பார்கள் இல்லையேல் மறந்து போவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X