பொது செய்தி

இந்தியா

சீனாவின் ஆக்கிரமிப்பு நோக்கம் வெளிப்படுகிறது: விவேக் ராம்

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி-“எல்லையில், உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நடக்கும் முயற்சிகள், சீனாவின் ஆக்கிரமிப்பு நோக்கத்தை வெளிப்படுத்துகிறது,” என, இந்திய விமானப்படை தலைமை தளபதி விவேக் ராம் தெரிவித்துள்ளார்.எல்லைப் பிரச்னை காரணமாக, நம் அண்டை நாடான சீனாவுடன், கடந்த ஆண்டு முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு தீர்வு காண, இருதரப்பு உயர் அதிகாரிகள் மத்தியில் தொடர்ந்து

புதுடில்லி-“எல்லையில், உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நடக்கும் முயற்சிகள், சீனாவின் ஆக்கிரமிப்பு நோக்கத்தை வெளிப்படுத்துகிறது,” என, இந்திய விமானப்படை தலைமை தளபதி விவேக் ராம் தெரிவித்துள்ளார்.latest tamil news


எல்லைப் பிரச்னை காரணமாக, நம் அண்டை நாடான சீனாவுடன், கடந்த ஆண்டு முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு தீர்வு காண, இருதரப்பு உயர் அதிகாரிகள் மத்தியில் தொடர்ந்து பேச்சுகள் நடந்து வருகின்றன. எனினும், அதில் இதுவரை தீர்வு எட்டப்படாமல் உள்ளது.இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய விமானப் படையின் தலைமை தளபதி விவேக் ராம், சீன விவகாரம் குறித்து பேசினார்.


latest tamil news


அப்போது அவர் கூறியதாவது:சீனா மேலாதிக்கம் நிறைந்த மற்றும் இதர நாடுகளை சிக்கவைக்கும் கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது. மறுபுறம், பாகிஸ்தான் விமானப் படையில் திறன்களை மேம்படுத்தும் முயற்சிகள் நடந்துவருகின்றன. உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ரீதியில், ராணுவ திறனை மேம்படுத்துவதில், சீனாவும் பாகிஸ்தானும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

இந்தியா, தன் இலக்குகளை அடைவதற்கு, சீனா பல சவால்களை உருவாக்கி வருகிறது.திபெத் பிராந்தியத்தில், சட்டவிரோதமாக விமான நிலையங்களை கட்டமைத்து, அதில் விமானங்களையும் நிறுத்தி வருகிறது. இந்த நடவடிக்கை, அதன் ஆக்கிரமிப்பு நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.பொருளாதார களத்தில், வளர்ந்து வரும் சீனா, இந்தியாவுக்கு போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
09-டிச-202112:41:23 IST Report Abuse
sankaseshan தஞ்சை மன்னன் போன்றவர்களுக்கு இதுமாதிரி வக்கிரமான எண்ணங்கள் தோன்றுவது இயல்பு
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
09-டிச-202112:06:20 IST Report Abuse
Ramesh Sargam Year 2020 - Taiwan's military chief General Shen Yi-ming among eight killed in a horror helicopter crash. Year 2021 - India's CDS (combined defence services) Chief General Bipin Rawat was killed in a helicopter crash along with 13 others including his wife. - See the similarity. Both were fighting Chinese aggression in the recent years. So, can we assume that China's hand might be there behind Rawat's crash too??
Rate this:
Cancel
jeyakumar - chennai,இந்தியா
09-டிச-202111:50:49 IST Report Abuse
jeyakumar ink
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X