புதுச்சேரி : புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு துறையில் புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பணி ஆணை வழங்கினார்.புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு துறையில் புதிதாக 4 மருந்து ஆய்வாளர்கள், 4 உதவி மருந்து ஆய்வாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களுடன், உணவு மற்றும் மருந்து ஆய்வகத் துறையில் புதிதாக நான்கு முதுநிலை ஆய்வக உதவியாளர், நான்கு வேதியியல் உதவியாளர் மற்றும் 4 ஆய்வக உதவியாளர் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இவர்கள் அனைவரும் கல்வி மதிப்பெண், வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி, உயர்படிப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணி நியமன ஆணைகளை, சட்டசபை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, மருந்து ஆய்வக தலைமை அதிகாரி இளந்திரையன், முதுநிலை மருந்து ஆய்வாளர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement