மதுரை - -மதுரை பைபாஸ் ரோட்டில் பொன்மேனி, ஆர்.டி.ஓ., அலுவலகம், தினமலர் அவென்யூ உள்ளிட்ட பல பகுதிகளின் சந்திப்பு ரோடுகளில் தள்ளுவண்டி, பெட்டி கடைகளும் ஆக்கிரமித்துள்ளதால் அடிக்கடி விபத்து நடக்கிறது.
தற்போது பெரியார் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்ட நிலையில் அங்கு கட்டப்படும் வணிக வளாகத்தை விரைவில் கட்டி முடித்து, பைபாஸில் உள்ள தற்காலிக கடைகளை மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பைபாஸ் ரோட்டில் ஏற்கனவே சர்வீஸ், மெயின் ரோட்டு ஓரங்களில் இட்லி கடை முதல் துணிக்கடை வரை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில் பெரியார், ஷாப்பிங் காம்பளக்ஸ் வணிக வளாகம் கட்டுமான பணிகள் துவங்கிய பின் அங்கிருந்த கடைகளும் எல்லீஸ் நகர், பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. பைபாஸ் ரோட்டில் வைக்கப்பட்டுள்ள கடைகளால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தை விரைவில் கட்டி முடித்து அங்கு கடைகளை மாற்ற வேண்டும் என பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் பைபாஸ் ரோடு ஆக்கிரமிப்பு குறித்து கண்டு கொள்வதே இல்லை. மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது பஸ் ஸ்டாண்ட் மட்டும் தான் திறக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக 6 மாதங்களில் வணிக வளாகம் கட்டும் பணிகள் முடிந்து விடும். அதற்கு பின் முறைப்படி ஏலம் விடப்பட்டு எல்லீஸ் நகர், பைபாஸ் ரோட்டில் உள்ள கடைகள் அங்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement