புதிய பாடத்திட்டத்துக்கு வினாவங்கி எப்போது? பெற்றோர், மாணவ மாணவியர் எதிர்பார்ப்பு

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (3)
Advertisement
கோவை : புதிய பாடத்திட்டம் மாற்றிய பிறகு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வே நடத்தாத நிலையில், விரைவில் வினாவங்கி வெளியிட்டால் தான் பயிற்சி பெற, பயனுள்ளதாக இருக்கும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 2019ல், புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டது. புளூ பிரிண்ட் இல்லாமல், முழு பாடத்திட்டத்தில் இருந்தும், கேள்விகள் இடம்பெறும் என
SSLC, Public Exam, Question Bank, Students, TN exam

கோவை : புதிய பாடத்திட்டம் மாற்றிய பிறகு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வே நடத்தாத நிலையில், விரைவில் வினாவங்கி வெளியிட்டால் தான் பயிற்சி பெற, பயனுள்ளதாக இருக்கும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 2019ல், புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டது. புளூ பிரிண்ட் இல்லாமல், முழு பாடத்திட்டத்தில் இருந்தும், கேள்விகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டது. அட்டவணை வெளியிட்டு, தேர்வு நெருங்க இருந்த நிலையில், கொரோனா தொற்று பரவியதால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், தேர்வு தள்ளி வைக்கப்பட்டு பின் நிறுத்தப்பட்டது.

கடந்தாண்டும் பத்தாம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டில், கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இதற்காக, ஹைடெக் லேப் மூலம் ஆன்லைன் வழியாக, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.


latest tamil news



பாடத்திட்டம் குறைக்கப்பட்டதோடு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகள் மூலம், மாணவர்களை தயார்ப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, வினாவங்கி வெளியிட வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.

பெற்றோர் சிலர் கூறுகையில், 'பள்ளிகள் செப்., மாதம்தான் திறக்கப்பட்டன. எல்லா பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடக்கவில்லை. சிலபஸ் குறைக்கப்பட்டாலும், புளூ பிரிண்ட் இல்லாததால், வினாவங்கி வெளியிட்டால் தான் பயிற்சி பெற பயனுள்ளதாக இருக்கும். கணிதப்பாடத்திற்கு பயிற்சி வினாக்கள் தான் முழு மதிப்பெண்கள் பெற உதவியாக இருக்கும். விரைவில் வினாவங்கி வெளியிட வேண்டும்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Troo Picture - Bangalore,இந்தியா
09-டிச-202115:19:23 IST Report Abuse
Troo Picture மாணவர்கள் பாடங்களை புரிந்து படிக்க வேண்டும் அப்படியானால் வினா வாங்கி தேவை இருக்காது. தயவு செய்து வினா வாங்கி பதில்களை மனப்பாடம் செய்து தேர்வுகளில் பதிலளிக்கும் முறையைக் கைவிட வேண்டும்.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
09-டிச-202112:50:47 IST Report Abuse
Suppan அந்த வினா வங்கிதானே கருணாவின் உருப்படாத சமச்சீர் கல்வியின் முதுகெலும்பு?
Rate this:
Cancel
raman - madurai ,இந்தியா
09-டிச-202111:17:54 IST Report Abuse
raman வினா வங்கி எப்போது என்று பெற்றோர்கள் கேட்பதாக செய்தி படித்தேன் தயவு செய்து வினா வங்கி அரசு தயார் செய்யவேண்டாம் மாணவர்கள் அதை தவிர்த்து எதையும் படிக்க மாட்டார்கள் தனியார்கள் அந்த வேலையை செய்யட்டும் மாணவர்கள் பலவிதமான கேள்வி பதிலை படித்து பலன் அடைவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X