பொது செய்தி

இந்தியா

எம்.ஐ.,17 வி5 ஹெலிகாப்டர் விபத்து: விடைதெரியாத கேள்விகள்!

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (58)
Share
Advertisement
புதுடில்லி: மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற நவீன எம்.ஐ.,17 வி5 ஹெலிகாப்டர் விபத்தில் பல விடைத் தெரியாத கேள்விகள் உள்ளன. தொடர்ந்து நடக்கும் விசாரணையில் தான் அவை தீர்க்கப்படும் என தெரிகிறது.தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 பேர் சென்ற எம்.ஐ.,17 வி5 ஹெலிகாப்டர் இன்று (டிச., 08) நண்பகல் குன்னூர், காட்டேரி அருகே

புதுடில்லி: மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற நவீன எம்.ஐ.,17 வி5 ஹெலிகாப்டர் விபத்தில் பல விடைத் தெரியாத கேள்விகள் உள்ளன. தொடர்ந்து நடக்கும் விசாரணையில் தான் அவை தீர்க்கப்படும் என தெரிகிறது.



latest tamil news


தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 பேர் சென்ற எம்.ஐ.,17 வி5 ஹெலிகாப்டர் இன்று (டிச., 08) நண்பகல் குன்னூர், காட்டேரி அருகே தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் விபத்திற்குள்ளானது. அதில் 13 பேர் இறந்தனர். வெலிங்க்டன் ராணுவ கல்லூரி பணியாளர் ஒருவர் மட்டும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதா அல்லது மேகமூட்டம் காரணமாக மரத்தில் மோதி தீப்பிடித்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் குறித்து விமானப் படை முன்னாள் அதிகாரிகள் சிலர் கூறுகையில், நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பயணிக்கிறார் என்பதால் ஹெலிகாப்டர் விரிவான சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும். மற்றொரு ஹெலிகாப்டரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். வானிலை நிலைமை சரிபார்க்கப்பட்ட பின்னரே ஹெலிகாப்டரை எடுத்திருப்பார்கள். மோசமான வானிலை இருந்திருந்தால் பயணத்தை ரத்து செய்ய முயற்சித்திருக்கலாம்?

அப்படி இவை எல்லாமே சாதாரணமாக இருந்திருந்தால், ஹெலிகாப்டர் குன்னூருக்கு அருகில் மேகங்களுக்கிடையே தாழ்வாக பறந்த போது மலை மீது உள்ள உயரமான மரங்களில் மோதியிருக்கலாம். அந்த வான் வழியில் பழக்கப்பட்ட விமானி தான் ஹெலிகாப்டரை இயக்கினாரா என்பது தெரியவில்லை என்கின்றனர்.


latest tamil news



பிரதமரின் நம்பிக்கைக்குரிய ஹெலிகாப்டர்!

எம்.ஐ.,17 வி5 வகை ஹெலிகாப்டர் நவீன ரக ராணுவ ஹெலிகாப்டர் ஆகும். உலகின் மேம்பட்ட ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்று. தற்போது விபத்துக்குள்ளானது ZP5164 சீரியல் எண் கொண்டது. பிரதமர் மோடி இதே ரகத்தில் ZP5238 சீரியல் எண் ஹெலிகாப்டர்களை பல்வேறு சந்தர்பங்களில் பயன்படுத்தியுள்ளார். கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை விழாவுக்கு இந்த ரக ஹெலிகாப்டரில் தான் அயோத்திக்கு வருகை தந்தார். அதே போல் இவ்வாண்டு ஏப்ரலில் மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தின் போது கங்காராம்பூர், ஜெய்நகர் கூட்டங்களுக்கு இதே ரக ஹெலிகாப்டரில் பயணித்துள்ளார்

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
09-டிச-202121:53:55 IST Report Abuse
Tamilan இது பிரதமரின் நம்பிக்கைக்குரிய ஹெலிகாப்டர் மட்டுமல்ல, பிரதமரால் கைப்பட தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லது பிரதமரின் மிக மிக மிக முக்கிய உலகத்தரம் வாய்ந்த மிக மிக மிக உயர்மட்ட குழு மட்டுமல்ல உலகிற்கே எடுத்துக்காட்டாக அமைந்த, பிரதமரால் அமைக்கப்பட்ட குழுவிநாரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இது சதியோ, சூழ்ச்சியோ, அல்லது தொழில் நுட்பா கோளாறோ, இயற்கையின் சீற்றமோ, காரணம் எதுவாக இருந்தாலும் இது மோடி மற்றும் மோடி கும்பலுக்கு கிடைத்த பெரிய அடி அல்ல இடி.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
09-டிச-202121:29:03 IST Report Abuse
Tamilan தொழில் நுட்பா கோளாறா? அதுவும் ஒரு முப்படைகளின் தளபதி சென்ற ஹெலிகாப்டரில்
Rate this:
Cancel
09-டிச-202121:19:17 IST Report Abuse
கூறமதலி இதுல உள் குத்தும் கிடையாது வெளி குத்தும் கிடையாது இது ஒரு சிறிய விஷயம்தான் அங்கே அவன் அதாவது எமன் தன்னுடைய பாசக்கயிறை வைத்துக்கொண்டு அந்த மரத்தில் காத்துக்கொண்டு இருந்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X