முப்படை தளபதி பிபின் ராவத் சொந்த ஊரில் சோகம்| Dinamalar

முப்படை தளபதி பிபின் ராவத் சொந்த ஊரில் சோகம்

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (8) | |
புதுடில்லி : ஜெனரல் பிபின் ராவத், உத்தரகண்ட் மாநிலம் துவாரிக்கல் வட்டாரத்தைச் சேர்ந்த சாய்னா கிராமத்தை சேர்ந்தவர். இந்த கிராமத்தில் தற்போது பிபின் ராவத்தின் உறவினர்கள் மட்டுமே வசித்து வருகின்றனர்.கடைசியாக, கடந்த, 2018ல் தனது சொந்த கிராமத்துக்கு பிபின் ராவத் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள தன் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். 'கிராமத்தில் தனக்கென ஒரு
RIPBipin Rawat,CDS,Bipin Rawat,Helicopter Accident

புதுடில்லி : ஜெனரல் பிபின் ராவத், உத்தரகண்ட் மாநிலம் துவாரிக்கல் வட்டாரத்தைச் சேர்ந்த சாய்னா கிராமத்தை சேர்ந்தவர். இந்த கிராமத்தில் தற்போது பிபின் ராவத்தின் உறவினர்கள் மட்டுமே வசித்து வருகின்றனர்.

கடைசியாக, கடந்த, 2018ல் தனது சொந்த கிராமத்துக்கு பிபின் ராவத் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள தன் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். 'கிராமத்தில் தனக்கென ஒரு வீடு கட்டி, பணி ஓய்வுக்குப் பிறகு இங்கு வந்துவிடப் போவதாக கூறிச் சென்றார்.


latest tamil news



வரும் ஏப்ரலில் அதற்காக வர உள்ளதாக சமீபத்தில் தொலைபேசியில் பேசியபோது கூறினார். ஆனால், அவருடைய ஆசை நிறைவேறாமல் போய்விட்டது' என, அவருடைய உறவினர் பரத் சிங் ராவத், கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார். அண்டை கிராமங்களில் உள்ளவர்கள், பிபின் ராவத் வீட்டுக்கு வந்து, அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X