பொது செய்தி

இந்தியா

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடலுக்கு இன்று வெலிங்டன்னில் அஞ்சலி

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
வெலிங்டன்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் , அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 11 பேர்களின் உடல்களுக்கு இன்று காலை 8 மணியளவில் வெலிங்டன்னில் அஞ்சலி செலுத்தப்படுகிறதுநீலகிரி மாவட்டம் வெலிங்டன்னில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர்
பிபின் ராவத், அஞ்சலி, வெலிங்டன், ராணுவ வீரர்கள், முதல்வர்

வெலிங்டன்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் , அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 11 பேர்களின் உடல்களுக்கு இன்று காலை 8 மணியளவில் வெலிங்டன்னில் அஞ்சலி செலுத்தப்படுகிறது

நீலகிரி மாவட்டம் வெலிங்டன்னில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து எம்.ஐ 17 வி 5 ரக ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று 12.40 மணியளவில் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது. விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்த அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு ராணுவ வீரர் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 11 பேரின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் பிபின் ராவத், மனைவி மற்றும் ராணுவ வீரர்களின் உடலுக்கு வெலிங்டன்னில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.


latest tamil news
முதல்வர் வருகை

பிபின் ராவத் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். பிபின் ராவத் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு பிறகு அவரது உடல் மற்றும் அவரது மனைவியின் உடல் டில்லிக்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் இறந்த மற்ற ராணுவ வீரர்களின் உடல்களும் அவரவர் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்படும் என தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thamodaran chinnasamy - chennai,இந்தியா
09-டிச-202108:31:58 IST Report Abuse
thamodaran chinnasamy மனம் பதறுகிறது . அவர்கள் அனைவரின் ஆத்மா சாந்தியடைய இறையை பிரார்த்திப்போம்
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
09-டிச-202108:28:00 IST Report Abuse
J. G. Muthuraj இந்த செய்தியை வாசிக்கும்போதே மனசு இழகுகிறது....மூச்சு சற்று வேகம் கொள்கிறது ...விபத்தில் இறந்த தனிப்பட்ட ஒவ்வொரு வீரருக்கும் எங்களது வீர வணக்கங்கள்....அன்னாரை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எங்கள் அனுதாப இரங்கல் ...உங்கள் கண்ணீரில் நாங்களும் பங்கு பெறுகிறோம்....
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
09-டிச-202108:26:07 IST Report Abuse
venkatan "ஊழிற் பெருவலி யாவுள?"மரணித்த அத்துணை பேரின் ஆன்மாக்களும் இறை நிழலில் இளைப்பாரட்டும்..நாராயண.. நாராயண..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X