பொது செய்தி

இந்தியா

13 பேரின் உடல்கள் சாலை வழியாக செல்கிறது: வீரர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரளுங்கள் வாசகர்களே

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
குன்னுார் : நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் நேற்று(டிச., 8) ஏற்பட்ட ஹெலிகாப்டர் கோர விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சாலை மார்க்கமாக குன்னூர் செல்கிறது வீரர்கள் உடல். இந்த உடல்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த திரளுமாறு தேச பக்தர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.ராணுவ
13 பேரின் உடல்கள் சாலை வழியாக செல்கிறது: வீரர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரளுங்கள் வாசகர்களே

குன்னுார் : நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் நேற்று(டிச., 8) ஏற்பட்ட ஹெலிகாப்டர் கோர விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சாலை மார்க்கமாக குன்னூர் செல்கிறது வீரர்கள் உடல். இந்த உடல்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த திரளுமாறு தேச பக்தர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ராணுவ உயர்அதிகாரிகள் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை 10 மணியளவில் அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்திய பிறகு சாலை மார்க்கமாக உடல்கள் கோவை சூலூர் விமான நிலையம் கொண்டுசெல்லப்பட உள்ளது.


latest tamil news



அந்த நேரத்தில் பாவியார் சாலை முழுவதும் வாகன போக்குவரத்து தடை செய்யப்படும். அதே நேரத்தில் நஞ்சப்பா சத்திரம் பகுதி முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.
வெலிங்டனில் அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் உடல்கள் கோவை கொண்டு செல்லப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram RV -  ( Posted via: Dinamalar Android App )
09-டிச-202118:09:25 IST Report Abuse
Ram RV மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்த வாசகர்களை தினமலர் அழைத்தது போற்றுதலுக்குரிய செயல். உண்மையான தேசிய நாளிதழான தினமலருக்கு வாழ்த்துக்கள், வணக்கங்கள்.
Rate this:
Cancel
Jayanthi Srinivasan - chennai,இந்தியா
09-டிச-202117:03:02 IST Report Abuse
Jayanthi Srinivasan நமது நாட்டுக்கு பேரிழப்பு. அனைவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Cancel
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
09-டிச-202115:17:15 IST Report Abuse
abdulrahim புதைக்கப்பட போகும் உங்கள் பூத உடல்களோடு உங்களின் வீரமும் தியாகமும் நிச்சயம் விதைக்கப்படும் , எல்லையை காத்த மாவீரர்களுக்கு எல்லையில்லா துயருடன் வீர வணக்கங்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X