விபத்துக்கு முன் பிபின் ராவத் ஹெலிகாப்டர் பறந்த கடைசி காட்சி; வீடியோ வைரல்

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (10) | |
Advertisement
குன்னூர்: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், விபத்திற்கு சில வினாடிகளுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட ஹெலிகாப்டர் வீடியோ காட்சி வைரலாகியுள்ளது. சுற்றுலா பயணிகள் எடுத்துள்ள அந்த வீடியோவில் ஹெலிகாப்டர் பறந்த கடைசி நேர காட்சிகள் மற்றும் வெடித்து சிதறும் சப்தமும் இடம் பெற்றுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுார் மலை பகுதியில்,
Bipin Rawat, Helicopter Crash, Video, Viral, பிபின் ராவத், ஹெலிகாப்டர் விபத்து, வீடியோ, வைரல்

குன்னூர்: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், விபத்திற்கு சில வினாடிகளுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட ஹெலிகாப்டர் வீடியோ காட்சி வைரலாகியுள்ளது. சுற்றுலா பயணிகள் எடுத்துள்ள அந்த வீடியோவில் ஹெலிகாப்டர் பறந்த கடைசி நேர காட்சிகள் மற்றும் வெடித்து சிதறும் சப்தமும் இடம் பெற்றுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுார் மலை பகுதியில், நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் சென்ற ராணுவ ஹெலிகாப்டர், பயங்கர விபத்தில் சிக்கியது. மரத்தில் மோதிய வேகத்தில், சட்டென தீப்பிடித்து எரிந்ததில், ராவத், அவர் மனைவி உட்பட 13 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அதிகாரி மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து நடப்பதற்கு முன்பு சுற்றுலா பயணி எடுத்த விடியோ இதோ. ஹெலிகாப்டர் மேகத்தில் மறைந்து விடுகிறது . அடுத்த சில விநாடிகளில் வெடிக்கும் சத்தம் பதிவாகியுள்ளது.

latest tamil newsஇந்த விபத்து நடப்பதற்கு முன், சுற்றுலா பயணிகள் எடுத்த வீடியோ வைரலாகியுள்ளது. அதில், முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் பனிமூட்டத்தால் மலைப்பகுதியில் தாழ்வாக செல்வது இடம்பெற்றுள்ளது. மேலும், சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் வெடித்து சிதறும் சப்தமும் கேட்க, வீடியோவில் இருக்கும் நபர்கள் 'என்னாச்சு, உடைஞ்சுருச்சா' என அதிர்ச்சியுடன் கேட்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்திற்கு சில வினாடிகளுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட இவ்வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-டிச-202105:37:49 IST Report Abuse
Kasimani Baskaran இதை சிரிய ஆகாயப்படை ஹெலிக்காப்டர் வீடியோவுடன் இணைத்து தயாரிக்கப்பட்ட போலி வீடியோ என்று சாமி சொல்கிறார்.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
09-டிச-202122:11:04 IST Report Abuse
Krishnamurthy Venkatesan தீவிர பனியின் தாக்கம் காரணமாக முன்னால் உள்ள objects தெளிவாக இல்லாத காரணத்தால், பைலட் ஹெலிகோப்டேரை உயரே எழுப்பி திரும்பி சூலூருக்கே வந்திருக்க வேண்டும். எது/யார் அவரை தடுத்தது என்று தெரியவில்லை. விதி மதியை மயங்க செய்துவிட்டது.
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
09-டிச-202117:24:20 IST Report Abuse
pattikkaattaan இந்த பகுதி செங்குத்தான மலைகள் உள்ள பகுதி. ஹெலிகாப்டர் மேகத்திற்குள் நுளைந்த அடுத்த வினாடிகளில் அங்குள்ள உயரமான மரங்கள்மீது மோதியிருக்க வாய்ப்பு உள்ளது. கீழே இறங்கப்பாேகிறாேம் என்று விமானி சிறிது தாழ்வாக இயக்கியிருக்கலாம். மிகப்பெரிய இழப்பு நாட்டுக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X