பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் புதிய முப்படை தலைமை தளபதி நரவானே?

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தமிழகத்தின் குன்னுார் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக தற்போதைய ராணுவ தளபதி நராவானே நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.டில்லியில் இருந்து நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி
India, Naravane, New Commander, Chief, Indian Army, இந்தியா, புதிய முப்படை தலைமை தளபதி, நராவானே,

புதுடில்லி: நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தமிழகத்தின் குன்னுார் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக தற்போதைய ராணுவ தளபதி நராவானே நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டில்லியில் இருந்து நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு ராணுவ ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 அதிகாரிகளுடன் நேற்று (டிச.,8) காலை பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் குன்னுார் அருகே பனிமூட்டம் அதிகம் இருந்ததால் தாழ்வாக பறந்தததாக தெரிகிறது. இதனால் மரத்தில் மோதி ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.


latest tamil news


ராணுவ தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற பிபின் ராவத், நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதியாக 2020ம் ஆண்டு ஜனவரி 20 தேதி பொறுப்பேற்றார். ராணுவ, விமானப் படை, கப்பற்படை ஆகியவற்றின் மூன்று தளபதிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுகிற வகையில் முப்படைகளின் தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டது.

பிபின் ராவத் மறைவால் நாட்டின் புதிய முப்படைகளின் தலைமை தளபதி நியமனம் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 10 நாட்களுக்குள் புதிய முப்படைகளின் தலைமை தளபதி நியமிக்கப்பட உள்ளார்.

இதனடிப்படையில் தற்போதைய ராணுவ தளபதியான நரவானே அடுத்த முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.kausalya - Chennai,இந்தியா
09-டிச-202114:53:27 IST Report Abuse
S.kausalya இதிலெல்லாம் இட ஒதுக்கீடு கிடையாதா
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்ஒனக்கு கிடைக்கும்னு பாக்கிறியோ?...
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-டிச-202114:21:04 IST Report Abuse
முக்கண் மைந்தன் அர்னப் கோசாமி, ஜெய் சா, இப்டீன்னு பி எம் ஓ வுல ந்யூசு கசியிதே ‼️
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
09-டிச-202113:51:17 IST Report Abuse
chennai sivakumar Good. He is also a tuff guy like late Bipin ravat.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X