பொது செய்தி

இந்தியா

பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து: நடந்தது என்ன: பார்லியில் ராஜ்நாத்சிங் விளக்கம்

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து பார்லியில் பிபின் ராவத் உள்ளிட்ட வீரர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்தார்.நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று (டிச.,08) நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில்,
Bipin Rawat, Parliament, IAF, Rajnath Singh, பிபின் ராவத், பார்லிமென்ட், இரங்கல் தீர்மானம், ராஜ்நாத்சிங், பார்லிமென்ட்

புதுடில்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து பார்லியில் பிபின் ராவத் உள்ளிட்ட வீரர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று (டிச.,08) நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 வீரர்கள் உயிரிழந்தனர்.
பிபின் ராவத் மறைவுக்கு பார்லிமென்டில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். லோக்சபாவில் ராஜ்நாத் பேசியதாவது: கோவை சூலூரில் இருந்து காலை 11.48 மணிக்கு ஹெலிகாப்டரில் கிளம்பியுள்ளனர். வெலிங்கடனில் தரையிறங்குவதற்கு 7 நிமிடங்களுக்கு முன்னதாக விபத்து ஏற்பட்டுள்ளது.

பார்லிமென்ட் கூட்டத்தொடர் தொடங்கியதும் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். ஹெலிகாப்டர் 11.35 மணிக்கு கிளம்பியது. வெலிங்டனை அடைய 12 நிமிடங்கள் முன் விபத்துக்குள்ளானது.உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில் மீட்பு பணி நடந்தது என்றார். விபத்து குறித்து , முப்படைகளின் சார்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஏர் மார்ஷல் மனவேந்திர சிங் தலைமையில் நடைபெறுகிறது. தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும். விபத்தில் தப்பிய குரூப் கேப்டன் வருண் சிங்குக்கு, வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவித்தார்.


latest tamil news


விபத்து நடப்பற்கு முன்னர் கட்டுப்பாட்டை இழந்த உடன் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து முப்படை விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது. ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில், ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது. விபத்து தொடர்பாக, ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான விசாரணை துவங்கியுள்ளது. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடல் முழு ராணுவம் மற்றும் அரசு மரியாதையுடன் தலைநகர் டில்லியில் தகனம் செய்யப்படும். ஹெலிகாப்டரை இயக்கிய விமானிகளில் ஒருவரான வருண் சிங் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உயிர்காக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
10-டிச-202107:16:16 IST Report Abuse
Subramaniyam Veeranathan இந்தியன் ராணுவத்திற்கு எந்தவித அரசியல் உணர்வும் கிடையாது. தயவுசெய்து நம் முப்படை தளபதி இறந்த இந்த சோக சூழ்நிலையில் அரசியல் பேசும் தேசவிரோதிகளின் கருத்துகளை இங்கே இப்போது பதிவிடார்தீர்கள்
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
09-டிச-202112:16:13 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஆர் எஸ் எஸ் கும்பலின் ஊளை சத்தம் அதிகமாக இருப்பதை பார்த்தல் முதலில் விசாரிக்கப்பவேண்டிய கும்பல் அவர்களைத்தான் இருக்கும் இவருக்கும் சமீபத்தில் நடத்த ஆர் எஸ் எஸ் கும்பலின் கூட்டத்தில் கருது வேறுபாடு இருந்து வந்து உள்ளது
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
09-டிச-202123:09:12 IST Report Abuse
Amal Anandanராஜீவ் இருந்தபோதும் உடனே திமுகவை குறை சொன்னாங்க இப்போதும் அதுவே நடக்கிறது அதுவே சந்தேகத்தை கிளப்புது....
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
09-டிச-202112:08:19 IST Report Abuse
தஞ்சை மன்னர் விளக்கம் கொடுக்கலாம் ஆனால் முப்படை தளபதி 130 கோடி மக்களின் காவலாளி இப்படி இறந்து விட்டார் என்று சொன்னால் உலக நாடுகள் எப்படி எடுத்து கொள்ளும் நம் நாட்டை பற்றி இதில் வல்லரசு வல்லரசு என்று வாயில் கூவி கொண்டே இருக்கவேண்டியதுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X