பிபின் ராவத் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
வெலிங்டன்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் முப்படை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.நீலகிரி மாவட்டம் வெலிங்டன்னில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மற்றும் ராணுவ வீரர்கள்
Bipin Rawat, Tamilnadu CM, Stalin, Respect, பிபின் ராவத், தமிழகம், முதல்வர், ஸ்டாலின், மரியாதை, தமிழிசை சவுந்தரராஜன்

வெலிங்டன்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் முப்படை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.நீலகிரி மாவட்டம் வெலிங்டன்னில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து எம்.ஐ 17 வி 5 ரக ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது. விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடன் பயணித்த அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.ராணுவ அதிகாரிகள் உடலுக்கு ஸ்டாலின் சல்யூட் | Helicopter crash | Bipin Rawat | MK Stalin | Dinamalar

latest tamil newsவிபத்து நடந்த இடத்தில் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு ராணுவ வீரர் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கொண்டுவரப்பட்டு அணிவகுப்புடன், பேரக்ஸ் நாகேஷ் நினைவு சதுக்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவர்களது உடலுக்கு முப்படை அதிகாரிகள், தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மக்கள் வரிசையாக சென்று மரியாதை செலுத்தினர்.latest tamil news


இதனைத்தொடர்ந்து பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் கோவை சூலூருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து டில்லிக்கு விமானம் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. விபத்தில் இறந்த மற்ற ராணுவ வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிகிறது.


latest tamil news
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pondy ponnu - Paris,பிரான்ஸ்
10-டிச-202114:37:56 IST Report Abuse
Pondy ponnu so much for advertising about the armed forces by the present govt has resulted in such a shame. Atleast be honest from now on
Rate this:
Cancel
விடியலை தேடி - அணில் புரம்,இந்தியா
10-டிச-202100:42:29 IST Report Abuse
விடியலை தேடி வேதனை தரும் நிகழ்வு இங்கும் அரசியல் செய்யும் சிலரை தூர வைத்து விட்டு நாம் இறையை பிரார்த்திப்போம்
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
09-டிச-202121:24:51 IST Report Abuse
Tamilan இந்தியா உலகத்தரத்தை மிஞ்சிவிட்டது என்று ஒரு புறம் பிரச்சாரம் நடக்கும் போது இதெல்லாம் அதற்க்கு வேட்டுவைக்காதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X