பொது செய்தி

இந்தியா

அதிநவீன ‛எம்ஐ17 வி5' ரக ஹெலிகாப்டர் சந்தித்த விபத்துகள்

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
குன்னுார்: குன்னுாரில் விபத்துக்குள்ளான அதிநவீன ‛எம்ஐ17 வி5' ஹெலிகாப்டரை வாங்குவதற்கு கடந்த 2008ம் ஆண்டு ரஷ்யாவுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. ரஷ்ய ஹெலிகாப்டரின் துணை நிறுவனமான கசான் நிறுவனம் தயாரித்தது. இந்த ஹெலிகாப்டரில் காலநிலையைத் தெரிந்து கொள்ளும் ரேடார், இந்த தலைமுறைக்கான இரவுநேரத்தில் துல்லியமாக இலக்குகளைப் பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 2011ம்
Accident, Involving, Sophisticated, MI17V5, Helicopter, அதிநவீன எம்ஐ17 வி5, ஹெலிகாப்டர், சந்தித்த விபத்துகள்,

குன்னுார்: குன்னுாரில் விபத்துக்குள்ளான அதிநவீன ‛எம்ஐ17 வி5' ஹெலிகாப்டரை வாங்குவதற்கு கடந்த 2008ம் ஆண்டு ரஷ்யாவுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. ரஷ்ய ஹெலிகாப்டரின் துணை நிறுவனமான கசான் நிறுவனம் தயாரித்தது. இந்த ஹெலிகாப்டரில் காலநிலையைத் தெரிந்து கொள்ளும் ரேடார், இந்த தலைமுறைக்கான இரவுநேரத்தில் துல்லியமாக இலக்குகளைப் பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 2011ம் ஆண்டு செப்டம்பர் முதல் பேட்ச் ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டன.

ஆனால், 2012ம் ஆண்டு பிப்ரவரி தான் விமானப்படையில் முறைப்படி இந்த ரக ஹெலிகாப்டர்கள் சேர்க்கப்பட்டன. ராணுவ வீரர்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லவும், ராணுவத் தளவாடங்களை கொண்டு செல்லவும், உயரமான இடங்களில் பொருட்களை கொண்டு சேர்க்கவும் இந்த ரக ஹெலிகாப்டர்கள் அதிகமாக பயன்பட்டன.


latest tamil newsகடந்த 10 ஆண்டுகளில் எம்ஐ 17 வி5 ரக ஹெலிகாப்டர்கள் சந்தித்த விபத்துக்கள்:

2012ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி: குஜராத்தின் ஜாம்நகர் விமானப்படைத் தளத்திலிருந்து 10 கி.மீ., தொலைவில் இந்த எம்ஐ 17 வி5 ரக ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 9 வீரர்களும் உயிரிழந்தனர்.

2013ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி: உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது இந்த ரக ஹெலிகாப்டர் மீட்புப்பணியில் ஈடுபட்டு, கேதர்நாத்திலிருந்து திரும்பியது. அப்போது நடந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 8 பேரும் உயிரிழந்தனர்.

2017ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி: அருணாச்சலப்பிரதேசம், தவாங் அருகே சீனாவின் எல்லைக்கு அருகே இந்த ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அப்போது ஹெலிகாப்டரில் பயணித்த 7 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

2018ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி: உத்தரகாண்ட் மாநிலம், இமாலயமலை பகுதியில் கேதர்நாத் அருகே மலைப்பகுதியில் விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டரில் இருந்த 6 பேரும் எந்தவிதமான காயமும் இன்றி உயிர் தப்பினர்.

2021 நவம்பர் 8ம் தேதி: கிழக்கு அருணாச்சலப்பிரதேசத்தில் ராணுவத் தளத்தில் தரையிறங்கும்போது திடீரென தரையில் மோதியது. ஆனால், சிறுவிபத்து என்பதால், விமானிகள், வீரர்கள் சிறிய காயங்களுடன் தப்பித்தனர்.

நேற்று டிசம்பர் 8 ம் தேதி: கோவை சூலுாரில் இருந்து நேற்று காலை வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு கிளம்பிய ஹெலிகாப்டர் காட்டேரி என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், முப்படை ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி, பிபின் ராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahalingam Laxman - Chapel Hill,யூ.எஸ்.ஏ
10-டிச-202109:51:06 IST Report Abuse
Mahalingam Laxman ரஷ்ய விமான விபத்துக்கள் அதிகமாகி வருவதை ஒட்டி இந்த விமானங்களை உபயோகிப்பதை மறுஆய்வு செய்யவேண்டும்.
Rate this:
Cancel
RK -  ( Posted via: Dinamalar Android App )
10-டிச-202109:04:31 IST Report Abuse
RK அமெரிக்காவை நம்பாமல் ரஜியாவை மட்டும் நம்பினால் போதாது. நான் சொல்வது என்னவென்றால் அமெரிக்காவின் தொழில்நுட்ப திறன் நம்பிக்கை வாய்ந்தது.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
09-டிச-202122:05:16 IST Report Abuse
Tamilan கோடிக்கணக்கான கோடிகள் இருந்து என்ன பயன்? முப்படைகளின் தளபதியை காப்பாற்ற முடியவில்லை ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X