பொது செய்தி

தமிழ்நாடு

சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்து செல்லப்பட்டார் விமானி வருண் சிங்

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (6+ 3)
Share
Advertisement
குன்னூர்: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்தப்பிய விமானி வருண் சிங் மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார்.நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரை இயக்கிய விமானிகளில் ஒருவரான வருண் சிங் பலத்த
Varun Singh, Treatment, Bengaluru, வருண் சிங், பெங்களூரு, சிகிச்சை,

குன்னூர்: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்தப்பிய விமானி வருண் சிங் மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரை இயக்கிய விமானிகளில் ஒருவரான வருண் சிங் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். வருண் சிங்குக்கு, 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உயிர்காக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்லிமென்டில் இன்று (டிச.,09) கூறியிருந்தார்.


latest tamil news


இந்நிலையில், வருண் சிங்-ஐ கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அங்கிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக அவரை பெங்களூரு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு, தேஜஸ் ரக போர் விமானத்தை இயக்கியபோது, நடுவானில் அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. ஆனால் சூழ்நிலையை திறம்பட கையாண்ட வருண் சிங், அதை பத்திரமாக தரையிறக்கினார். அவருடைய தீர செயலுக்காக, இந்தாண்டு ஆகஸ்டில் அவருக்கு 'சவுரிய சக்ரா' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6+ 3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekaran CJ - bangalore,இந்தியா
10-டிச-202100:08:58 IST Report Abuse
Rajasekaran CJ அவர் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
09-டிச-202116:50:10 IST Report Abuse
jayvee மேகமூட்டத்தால் நடந்த விபத்தாகத்தான் இருக்கும்.. சரியான தெளிவான பார்வைப்புலனுக்கு அப்பால், தவறான கணிப்பில் இந்த ஹெலிகாப்டர் தரைமட்டத்திர்ற்கு அருகே வந்திருக்கவேண்டும்.
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
09-டிச-202115:10:15 IST Report Abuse
INDIAN Kumar பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் இவர் மூலம் நலம் பெற அனைவரும் வேண்டுவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X