பொது செய்தி

தமிழ்நாடு

கோவை சூலூரில் இருந்து 13 பேர் உடல்களுடன் சி130 சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் டில்லி கிளம்பியது

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
குன்னுார்: குன்னுார் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் முப்படை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் கோவை சூலுாரில் உள்ள விமானப்படை தளத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து உடல்களுடன் சி130 சூப்பர் ஹெர்குலிஸ் என்ற தனி விமானம் டில்லி புறப்பட்டு சென்றது.கோவை சூலுாரில் இருந்து நேற்று காலை
Bodies, 13 People, Arrived, Coimbatore, Sulur, கோவை, சூலூர், வந்தடைந்தன, 13 பேர், உடல்கள்,

குன்னுார்: குன்னுார் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் முப்படை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் கோவை சூலுாரில் உள்ள விமானப்படை தளத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து உடல்களுடன் சி130 சூப்பர் ஹெர்குலிஸ் என்ற தனி விமானம் டில்லி புறப்பட்டு சென்றது.

கோவை சூலுாரில் இருந்து நேற்று காலை வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு கிளம்பிய ஹெலிகாப்டர் காட்டேரி என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், முப்படை ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி, பிபின் ராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த விமானிக்கு பெங்களூருவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


latest tamil news



குன்னுார் வெலிங்கடன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்ட இவர்களது உடலுக்கு தமிழக முதல் ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் இவர்கள் உடல்கள் இன்று (டிச.,9) மதியம் 12.30 மணிக்கு 13 தனித்தனி ஆம்புலன்ஸ்கள் மூலம் சாலை மார்க்கமாக சுமார் 85 கிலோ மீட்டர் துாரமுள்ள சூலுார் விமானப்படை தளத்துக்கு கொண்டு சென்றனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மீது மலர்கள் துாவி அஞ்சலி செலுத்தினர்.

13 பேரின் உடல்களுடன் சூலுாரிலிருந்து சி130 சூப்பர் ஹெர்குலிஸ் என்ற தனி விமானம் டில்லி புறப்பட்டு சென்றது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
09-டிச-202117:16:56 IST Report Abuse
Chakkaravarthi Sk உயிர் தியாகம் செய்த அனைத்து வீரர்களுக்கும் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவர் மனைவி ஆகியோருக்கும் எங்களது கண்ணீர் அஞ்சலி. அவர்களுடைய கடமை கட்டுப்பாடு நாட்டுக்கு செய்த சேவைகளை நைவு கூர்ந்து வழி அனுப்பி வைப்போம். இறைவனுடைய விருந்தாளிகளாக செல்பவர்களுக்கு பயணம் இனிதாகட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Rate this:
Cancel
S.K. Praba - Madurai,இந்தியா
09-டிச-202117:14:25 IST Report Abuse
S.K. Praba வீர வணக்கம்
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
09-டிச-202116:53:29 IST Report Abuse
jayvee மிகவும் கொடூரமான நமத தேசத்திற்கு பேரிழப்பாக இந்த துயர சம்பவத்தை கொண்டுதாவது பச்சைகளும் சிகப்புகளும் தான் இருக்கும்.. சீனாவின் அடிமைகள் ரஷ்யா ஹெலிலப்டரை குறை கூறமாட்டார்கள் .. ஆனால் சீனாவிற்கு எதிராக சீனாவிற்கு எச்சரிக்கை கொடுத்த அமரர் திரு பிபின் ரவாட்டின் மரணத்தை சீனாவின் சார்பாக கொண்டாடுவார்கள் ..
Rate this:
09-டிச-202118:06:00 IST Report Abuse
அப்புசாமிராணுவ வீரர்களை அரசியலாக்காமல் இருக்கணும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X