பொது செய்தி

இந்தியா

ஒரு வழியாக முடிவுக்கு வந்தது ஓராண்டுக்கு மேல் நீடித்த விவசாயிகள் போராட்டம்

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: விவசாய சட்டங்களை எதிர்த்து ஓராண்டுக்கு மேலாக டில்லி எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக சம்யுக்த கிஷான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் உள்ளிட்ட சில மாநில விவசாயிகள் டில்லி எல்லையில் ஓராண்டுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்று அந்த
Farm Laws, Farmer Protest, Delhi, Agitation, Suspend, Farmers, வேளாண் சட்டங்கள், விவசாய சட்டங்கள், விவசாயிகள், போராட்டம், டில்லி, எல்லை, போராட்டம் வாபஸ், விவசாய சங்கம்

புதுடில்லி: விவசாய சட்டங்களை எதிர்த்து ஓராண்டுக்கு மேலாக டில்லி எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக சம்யுக்த கிஷான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் உள்ளிட்ட சில மாநில விவசாயிகள் டில்லி எல்லையில் ஓராண்டுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்று அந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதற்கான மசோதா பார்லியின் இரு அவைகளிலும் நிறைவேறியது. ஆனாலும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil news


அவற்றை ஏற்பது குறித்து மத்திய அரசு சமீபத்தில் தன் திட்டத்தை அனுப்பி வைத்தது. அதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்கள் வலியுறுத்தின. அதையடுத்து புதிய திட்டத்தை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அது குறித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சக்யுக்த கிஷான் மோர்ச்சா பிரதிநிதிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். அதன்படி, இன்று (டிச.,09) போராட்டத்தை கைவிடுவதாக சம்யுக்த கிஷான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.


மீண்டும் போராட்டம்:


latest tamil news


இது தொடர்பாக ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் விவசாய சங்கத் தலைவர்களுள் ஒருவரான குர்னாம் சிங் சாருனி கூறுகையில், 'போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளோம். ஜனவரி 15-ம் தேதி மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துவோம். அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தைத் தொடருவோம்,' என்றார். மேலும், நாளை மறுநாள் (டிச.,11) போராட்டக் களத்தில் இருந்து திரும்புவதாகவும் அறிவித்துள்ளனர். போராட்டம் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இப்போதிருந்தே விவசாயிகள் கூடாரத்தை காலி செய்ய துவங்கியுள்ளனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
09-டிச-202123:17:06 IST Report Abuse
Mohan இவர்கள் விவசாயிகள் அல்ல தேசதுரோகிகளின் விசுவாசிகள்.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
09-டிச-202121:04:13 IST Report Abuse
Rajagopal இவர்கள் விவசாயிகளே அல்ல. பண முதலைகள். உண்மையான விவசாயிகளின் முதுகெலும்பை உடைத்து லாபம் சம்பாத்தித்த இடைத்தரகர்கள். பிரிவினை வாதி சக்திகளோடு ஒன்று சேர்ந்து, விவசாயிகளை விடுதலை செய்யும் சட்டத்தை மறியல் மூலம் வாபஸ் செய்ய வைத்துள்ளார்கள். மோடி அரசு இவர்களை ஒன்றும் செய்யாமல் ஏன் விட்டு விட்டது என்று புரியவில்லை. இந்த மறியல் செய்ய கோடிக்கணக்கில் பணம் வேண்டும். இந்த மாறியலினால் கோடிக்கணக்கில் இழப்பு. இவர்களை பார்த்து பயந்து மோடி அரசு ஒரு நல்ல சட்டத்தை வாபஸ் பெற்றது நல்லதல்ல. இனிமேல் அரசு எதை செய்தாலும் மறியல் போராட்டம் மூலமாக எதையும் செய்ய விடாமல் தடுக்க முடியும் என்கிற தைரியம் நாட்டு விரோத சக்திகளுக்கு வந்து விட்டது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வைத்துக்கொண்டே இந்த மாதிரி தைரியம் இன்றி மோடி அரசு நடந்துகொண்டது வியப்பை அளிக்கிறது.
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
09-டிச-202118:47:37 IST Report Abuse
Kumar இனிமேல் ஆவது இவர்கள் போய் விவசாயம் பார்ப்பார்களா? வாழ்க வலமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
09-டிச-202120:29:11 IST Report Abuse
கௌடில்யன்அரசாங்க குடோன்களில் இருக்கும் கோதுமையும் அரிசியும் மூணு வருஷம் விவசாயம் பாக்காவிட்டாலும் மக்களுக்கு உணவு பிரச்னையை தீர்க்கும் ...அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் நவீன விவசாயம் செய்து மகசூலை பெருக்கி இந்தியாவை விட குறைந்த விலையில் தர தயாரா இருக்காங்க .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X