பொது செய்தி

இந்தியா

ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்நீத்தவர்களுக்கு இன்றிரவு பிரதமர் மரியாதை

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (5+ 4)
Share
Advertisement
புதுடில்லி: குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் இன்றிரவு (டிச.,09) டில்லி பாலம் விமான நிலையம் சென்றடைகிறது. அங்கு, பிரதமர் மோடி வீரர்களின் உடல்களுக்கு மரியாதை செலுத்துகிறார்.கோவை மாவட்டம் சூலுாரில் இருந்து நேற்று (டிச.,08) காலை வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு கிளம்பிய ஹெலிகாப்டர், காட்டேரி என்ற
BibinRawat, IAFHelicopterCrash, PMModi,

புதுடில்லி: குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் இன்றிரவு (டிச.,09) டில்லி பாலம் விமான நிலையம் சென்றடைகிறது. அங்கு, பிரதமர் மோடி வீரர்களின் உடல்களுக்கு மரியாதை செலுத்துகிறார்.

கோவை மாவட்டம் சூலுாரில் இருந்து நேற்று (டிச.,08) காலை வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு கிளம்பிய ஹெலிகாப்டர், காட்டேரி என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், முப்படை ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி, பிபின் ராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட விமானி வருண் சிங் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


latest tamil news


உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் குன்னூர் வெலிங்கடன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டது. அவர்களது உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் இவர்கள் உடல்கள் இன்று மதியம் 12.30 மணியளவில் தனித்தனி ஆம்புலன்ஸ்கள் மூலம் சாலை மார்க்கமாக சுமார் 85 கிலோ மீட்டர் துாரமுள்ள சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு சென்றனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மீது மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.


latest tamil news


சூலூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சி130 சூப்பர் ஹெர்குலிஸ் என்ற தனி விமானம் மூலம் டில்லி கொண்டு செல்லப்பட்டது. இவர்களது உடல்கள் இரவு 8 மணியளவில் டில்லியில் உள்ள பாலம் விமான நிலையத்திற்கு சென்றடையும் என்றும், இரவு 9 மணியளவில் பிரதமர் மோடி, வீரர்களின் உடல்களுக்கு மரியாதை செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புத்துறை அமைச்சர், பாதுகாப்பு இணையமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மூன்று படைகளின் தளபதிகள் இந்நிகழ்வில் பங்கேற்று உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு மரியாதை செலுத்துகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (5+ 4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
09-டிச-202120:23:14 IST Report Abuse
Samathuvan Don't pret to be a patriot by putting your nonsense comment like this. It is really a unfortunate incident that makes huge losses to our nation. If anyone enjoys on this matter, definitely just he can't be human being like you. Think twice and use your common sense prior to write your comments. This request is for you and the forthcoming writers also.
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
09-டிச-202118:58:17 IST Report Abuse
அறவோன் "பாரத புதல்வி" அன்னை சோனியாஜி அவர்களுக்கு பிறந்ததின வாழ்த்துக்கள் 🌷⭐🌟✨💫
Rate this:
09-டிச-202119:54:56 IST Report Abuse
SUBBU, MADURAI எலேய் அறவோனே நாடே துயரத்தில் இருக்கும் போது நீ உன் இரத்தத்தில் ஊறிய இந்திய தேச விரோத புத்தியை காண்பித்து விட்டாய்....
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
09-டிச-202118:49:16 IST Report Abuse
அறவோன் கொலையுண்ட 800 விவசாயிகளுக்கு முதலில் நரேந்திரன் மரியாதை செய்யட்டும்
Rate this:
Karthik - Dindigul,இந்தியா
09-டிச-202120:50:38 IST Report Abuse
Karthikஉன்னைப்போன்ற ஆட்களுக்கு "மரியாதை" செய்யவும் பலர் காத்துக்கொண்டிருக்கிறோம், நான் உட்பட....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X