பி.எஸ்.எப். அதிகார எல்லையை மீறவிடாதீர் : மாநில போலீசாருக்கு மம்தா உத்தரவு

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: எல்லை பாதுகாப்புபடையினர் அதிகார எல்லையை மீறவிடாமல் தடுத்திட வேண்டும் மாநில போலீசாருக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா உத்தரவிட்டுள்ளார்.இந்தியா - வங்கதேச எல்லை மாநிலங்களான மே.வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சர்வதேச எல்லையில் இருந்து 15 கி.மீ., தொலைவு வரை எல்லை பாதுகாப்புபடையினர் சோதனை செய்யும் அதிகாரம் 50 கி.மீ., ஆக நீட்டித்து மத்திய உள்துறை
  Mamata Banerjee Asks Police Not எல்லை  படையினர், அதிகார எல்லை, மீறவிடாதீர், மாநில போலீசார், மம்தா, உத்தரவு, To Let Border Force Breach Jurisdiction

புதுடில்லி: எல்லை பாதுகாப்புபடையினர் அதிகார எல்லையை மீறவிடாமல் தடுத்திட வேண்டும் மாநில போலீசாருக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா - வங்கதேச எல்லை மாநிலங்களான மே.வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சர்வதேச எல்லையில் இருந்து 15 கி.மீ., தொலைவு வரை எல்லை பாதுகாப்புபடையினர் சோதனை செய்யும் அதிகாரம் 50 கி.மீ., ஆக நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த அக்டோபரில் வெளியிட்டது.


latest tamil news



மத்திய அரசின் இந்த முடிவிற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக கடந்த நவம்பர் 24ல் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து முறையிட்டார்.

இந்நிலையில் முதல்வர் மம்தா இன்று (டிச.09) மாநில காவல்துறை டி.ஜி.பி.க்கு பிறப்பித்த உத்தரவில், இந்திய, வங்க தேச எல்லை பகுதியான கரீம்பூர் மாவட்டத்தில் பி.எஸ்.எப். படையினருக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட 15 கி.மீ. தொலைவு வரை உள்ள அதிகார எல்லைக்குள் அவர்களது கடமையை செய்யட்டும். அதற்கு மாறாக அதிகார எல்லையை மீறிடாமல் தடுத்திட வேண்டும். இவ்வாறு உத்தரவில் மம்தா தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.SRIRAM - CHENNAI,இந்தியா
10-டிச-202110:42:08 IST Report Abuse
C.SRIRAM இந்த மாதிரி தேச விரோத நபர்கள் நாட்டுக்கு தேவையில்லை. மத்திய அரசு எது சொன்னாலும் அதற்கு எதிர்ப்பு. மன நலம் குன்றியவர் போலும். இந்த ஆட்சி கூடிய சீக்கிரம் மூட்டை கட்டுவது மிக நல்லது
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
10-டிச-202109:00:51 IST Report Abuse
RajanRajan ரொஹிங்கியாக்கள் ஊடுருவல் முற்றுப்புள்ளியாகி விட்டது. தீதி கொதிக்கிறா ரசம் மாதிரி. இது பிரதமராவணுமாம் இந்தியாவுக்கு. அப்படியே மொத்த இந்தியாவையும் கைமாதி விட்டுட்டு சந்திரமண்டலத்துக்கு பூடுமே இது.
Rate this:
Cancel
10-டிச-202108:12:26 IST Report Abuse
ஆரூர் ரங் சுப்ரீம் கோர்ட்டிடம் வாங்கிக் கட்டிக்🤔 கொள்ள ஆசை போலிருக்கு . குட்டு வாங்கி அலறும் அழகைக்😉 காண வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X