பெயரின் 'இனிஷியலையும்' தமிழில் எழுத அரசு உத்தரவு

Updated : டிச 11, 2021 | Added : டிச 10, 2021 | கருத்துகள் (32) | |
Advertisement
சென்னை :'பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு ஆவணங்களில், தமிழில் பெயர் எழுதும் போது, முன் எழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டும்' என, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழில் பெயர் எழுதும் போது, 'இனிஷியல்' எனும் முன் எழுத்தையும், தமிழிலேயே எழுதும் நடைமுறையை, பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு ஆவணங்களில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.இதை
பெயரின் 'இனிஷியலையும்' தமிழில் எழுத அரசு உத்தரவு

சென்னை :'பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு ஆவணங்களில், தமிழில் பெயர் எழுதும் போது, முன் எழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டும்' என, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் பெயர் எழுதும் போது, 'இனிஷியல்' எனும் முன் எழுத்தையும், தமிழிலேயே எழுதும் நடைமுறையை, பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு ஆவணங்களில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.


இதை செயல்படுத்த, அரசாணை பிறப்பிக்கலாம் என தமிழ் வளர்ச்சி இயக்குனர், அரசுக்கு கருத்துரு அனுப்பினார். அதை பரிசீலனை செய்து அரசு வெளியிட்டுள்ள அரசாணை:

* முதல்வர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை, அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தமிழிலேயே கையொப்பம் இடவும், அதில் முன்னெழுத்துக்களையும் தமிழிலேயே எழுத வேண்டும் என ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் மீணடும் வலியுறுத்தப்படுகின்றன

* மாணவர்களின் தொடக்க கல்வி முதல் கல்லுாரி காலம் வரை, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க, தமிழை முதன் முதலில் மாணவர்கள் பெயரில் சேர்ப்பது சிறப்பானதாக அமையும்

* கல்லுாரி மாணவர்கள் இடையே, தமிழில் பெயர் எழுதும் போது, அதன் முன்னெழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையை, அன்றாட வாழ்வில் ஏற்படுத்த மாணவர்கள் பள்ளியில் சேர அளிக்கும் விண்ணப்பம், வருகைப் பதிவேடு, பள்ளி அல்லது கல்லுாரி முடித்து பெறும் சான்றிதழ் வரை, அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடன் வழங்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும்

* மாணவர்கள் கையொப்பமிடும் சூழ்நிலைகள் அனைத்திலும், தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட வேண்டும்

* தலைமை செயலகம் முதல் கடைநிலை அரசு அலுவலகம் வரை, அனைத்து அரசு துறை ஆணைகள் மற்றும் ஆவணங்களில், பொது மக்கள் பெயர்களை குறிப்பிடும் போது, முன்னெழுத்துகள் உட்பட பெயர் முழுமையையும், தமிழிலேயே பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது

* அரசு துறைகளில் பெறப்படும் விண்ணப்பங்களிலும், தமிழ் முன்னெழுத்துடன் கையொப்பமும், தமிழிலேயே இருக்க வேண்டும்

* பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைத்து அரசு அலுவலகங்களிலும், 'முன்னெழுத்தும் தமிழில், கையொப்பமும் தமிழில்' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும்.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
10-டிச-202123:58:09 IST Report Abuse
RajanRajan தமிழில் பெயரை எழுதும் போது முன் எழுத்தையும் (INITIAL) தமிழில் எழுத வேண்டும் அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள். அமைச்சர் கூறியபடி சில பெயர்களின் கற்பனை... இப்பெயர்கள் முழுக்க முழுக்கக் கற்பனையே - நிஜத்தில் எவரையும் குறிப்பிடும் நோக்கில் அல்ல - ஒரு விவாதத்தின் பொருட்டே பாலூர் விஸ்வநாதன் மகன் ராமசாமி - P.V. ராமசாமி இனி பா.வி.ராமசாமி ஆவார் குன்றத்தூர் சுப்ரமணியன் மகன் பாண்டி - K.S.பாண்டி - இனி கு.சு.பாண்டி ஆகி ஊரையே நாறடிப்பான் சாத்தூர் உதயகுமார் மகன் - தாமோதரனை அழைப்பவர்கள் சா.உ.தாமோதரா என அழைத்து அவரை ஒருகணம் திகைக்க வைக்கலாம் வானூர் வாசுதேவன் மகள் கமலாவை வா.வா.கமலா என எவர் அழைத்தாலும் அவள் கோபிக்க மாட்டாள் முத்தரசம்பட்டி துரைசாமி மகள் மைவிழி தனது கையெழுத்தை - இனிஷியல் மட்டும் போட்டு-இடும் போதெல்லாம் மு.து.மை ஆகிவிடுவார் காஞ்சிபுரம் லிங்கப்பன் மகன் கோவிந்தன் கா.லி.கோவிந்தன் ஆகிவிட்டதாலேயே - ஒரு நல்ல ஜெண்டில்மேன் ஆக இருக்கும் தகுதியை இழக்க வாய்ப்பு உண்டு வயலூர் சைலேந்திரன் மகள் சுந்தரி - வ.சை.சுந்தரி ஆவாள் இதெல்லாம் போகட்டும்... வேலூர் சின்னச்சாமி மகள் விஜயா என்ன ஆவாள் என்பதை நினைத்தால்தான் மனம் பதைக்கிறது 😂😀🤣😊😝😉😜😅😇
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
10-டிச-202121:52:08 IST Report Abuse
sankaseshan அனாவசியமான தனிமனித சுதந்திர தலையீடு முதல்வர் தன் பெயரை ... என்று எழுதட்டும்
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
10-டிச-202120:40:45 IST Report Abuse
Duruvesan இனி இவனுங்க chequela கை எழுத்து போட்டா செல்லாது 😭, விடியலின் ஆட்டம் ஹிந்துக்களை ஒழிக்க ஆரம்பம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X