புதுடில்லி:சி.பி.ஐ. அமலாக்கத் துறையின் தலைவர்கள் பதவிக் காலத்தை நீட்டிக்கும் மசோதாக்களுக்கு காங். உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சி.பி.ஐ. அமலாக்கத் துறையின் தலைவர்கள் பதவிக் காலத்தை இரண்டாண்டில் இருந்து ஐந்தாண்டு வரை நீட்டித்து மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டத்தை இயற்றியது. இதற்கான மசோதாக்கள் லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. இதை எதிர்த்து காங்.கின் மனீஷ் திவாரி பேசியதாவது: இந்த மசோதா ஒருதலைபட்சமானது.
சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகள் சுதந்திரமாக செயல்படும் வகையில் அதில் மத்திய அரசின் தலையீடு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் அவற்றின் தலைவர்கள் பதவிக் காலத்தை இரண்டாண்டுகளாக நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை என மேலும் மூன்று ஆண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கும் வகையில் இந்த அவசர சட்டம் அமைந்துள்ளது. இந்த அமைப்புகளை தன் விருப்பத்துக்கு ஏற்ப ஆட்டுவிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இது ஏற்புடையதல்ல.இவ்வாறு அவர் பேசினார்.
புரட்சிகர சோஷலிச கட்சியைச் சேர்ந்த என்.கே. பிரேமச்சந்திரனும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். ஒரு கட்டத்தில் மத்திய பார்லி விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியுடன் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement