இது உங்கள் இடம்: தி.மு.க., வரலாறு தெரிந்தோருக்கு புரியும்.. அதெல்லாம் வெறும் வேஷம்!

Added : டிச 10, 2021 | கருத்துகள் (128) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும்; கிழவியைத் துாக்கி மணையில் வை' என்று ஒரு சொலவடை உண்டு. அப்படி தான், தமிழகத்தில் தி.மு.க.,வின் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய பிரச்னைகள்,


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும்; கிழவியைத் துாக்கி மணையில் வை' என்று ஒரு சொலவடை உண்டு. அப்படி தான், தமிழகத்தில் தி.மு.க.,வின் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய பிரச்னைகள், நுாற்றுக்கணக்கில் வரிசைக் கட்டி காத்து கொண்டிருக்கின்றன.அதில் முதல் இடத்தை பிடித்து இருப்பது, மழை நீர் வெள்ளம். வீதி மட்டுமின்றி வீட்டிற்குள்ளும் புகுந்த வெள்ளத்தால், மக்கள் உச்ச கட்ட வேதனையில் தவித்து வருகின்றனர்.latest tamil news
இங்கே நிலைமை இவ்வாறிருக்க, டில்லியில் பார்லிமென்ட் கூட்டத் தொடரில், தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், 'சென்னை ஐ.ஐ.டி.,யில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்' என்று முழங்கி இருக்கிறார். பொத்தாம் பொதுவாக இந்த கோரிக்கையை கேட்போர், 'அட, இந்த கழக கண்மணிகளுக்கு தான் தமிழ் மீது எவ்வளவு பற்று' என்ற வியப்பு மேலிடலாம். ஆனால் அது, பற்றும் கிடையாது; பாசமும் கிடையாது; வெறும் வேஷம் என்பது, தி.மு.க., வரலாறு தெரிந்தோருக்கு மட்டும் நன்றாக புரியும்.

அந்த தமிழ்த்தாய் வாழ்த்தான, 'நீராடும் கடலுடுத்த...' பாடல், தி.மு.க., தலைவர்கள் எத்தனை பேருக்கு மனப்பாடமாக பாடத் தெரியும்? ஐ.ஐ.டி., என்பது, ஒரு மத்திய அரசு கலாசாலை. தமிழகத்தில் இருக்கிறதே தவிர, ஐ.ஐ.டி., நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் கிஞ்சிற்றும் சம்பந்தம் கிடையாது. இறை வணக்கத்தை நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும், தேசிய கீதத்தை நிறைவில் பாடுவதும் நடைமுறை. இந்த இறை வணக்கத்தைத் தான், தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, 'தமிழ்த்தாய் வாழ்த்து' என்று மாற்றி, 'நீராரும் கடலுடுத்த...' பாடலை அரங்கேற்றியது.


latest tamil newsநான், 40 ஆண்டு காலம் மத்திய அரசு பணியில் இருந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ளேன். நான் பணியில் இருந்த போது, அலுவலகத்தில் எந்த கூட்டம் நடந்தாலும், 'வந்தே மாதரம்... சுஜலாம் சுபலாம் மலயஜ சீதலாம்...' என்ற பாடலைத் தான் இறை வணக்கமாக பாடுவர். இது, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடல். அகில இந்திய வானொலியும், துார்தர்ஷனும், தினமும் நிகழ்ச்சிகளை துவக்குவதற்கு முன், இப்பாடலை ஒலிபரப்புவர்.

அதை விடுங்கள்... தி.மு.க.,வினர் நடத்தும், 'டிவி' நிறுவனங்கள் கூட தினமும், 'சுப்ரபாதம்' ஒளிபரப்பி தான், நிகழ்ச்சியை துவங்குகின்றனரே தவிர, தமிழ்த்தாய் வாழ்த்தை அல்ல. இவர்கள் தான், மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஐ.ஐ.டி.,யில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சத்தம் போடுகின்றனர். அதே தி.மு.க.,வினர் தான், தமிழக பள்ளிகளில் இறை வணக்கம் பாடக் கூடாது என்றும் தடையும் விதித்து இருக்கின்றனர்

Advertisement
வாசகர் கருத்து (128)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KMP - SIVAKASI,இந்தியா
17-டிச-202109:42:38 IST Report Abuse
KMP மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள், தமிழ் மண்ணில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடுவதில் ஏன் இந்த தயக்கம் ???
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
10-டிச-202123:36:41 IST Report Abuse
s t rajan இப்போது பள்ளிகளில் பாடுவதாக சொல்லப்படும் வாழ்த்து சுந்தரனார் எழுதியதை தில்லு முல்லு கலகக் காரர்கள் வெட்டி ஒட்டி திமுக கட்சிப் பிரசாரப் பாட்டு போல் இருக்கிறது. ஆகவே மத்திய அரசு நிபுணர் குழு வைத்து அதை சரி பார்த்து பின்பு நடைமுறை படுத்த வேண்டும். மேலும் இஸ்லாமிய க்ருத்துவ அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் இந்த (திருத்தப் பட்ட) வாழ்த்து பாடப்படுவதை கண்காணிக்க வேண்டும்
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
10-டிச-202122:50:49 IST Report Abuse
DARMHAR நடப்பது துக்ளக் தர்பார் என்பதை அறிந்துகொண்டால் சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X