அரசுக்கு எதிரான செய்திகள்: பதில் அளிக்க தனி அதிகாரிகள்

Added : டிச 10, 2021 | கருத்துகள் (26)
Advertisement
சென்னை : செய்தித்துறை இயக்குனர், அனைத்து துறைத் தலைவர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள், தினசரி பத்திரிகைகளில் வரும் அரசுக்கு எதிரான செய்திகள் மற்றும் 'டிவி' செய்திகள் விபரங்களை, காலை, 8:00 மணிக்குள், 'வாட்ஸ் ஆப்' வாயிலாக துறை செயலர், துறைத் தலைவர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அந்த
DMK, NEWS, செய்தித்துறை

சென்னை : செய்தித்துறை இயக்குனர், அனைத்து துறைத் தலைவர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள், தினசரி பத்திரிகைகளில் வரும் அரசுக்கு எதிரான செய்திகள் மற்றும் 'டிவி' செய்திகள் விபரங்களை, காலை, 8:00 மணிக்குள், 'வாட்ஸ் ஆப்' வாயிலாக துறை செயலர், துறைத் தலைவர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டும்.

அவர்கள் அந்த செய்தியின் உண்மை தன்மையை சரி பார்த்து, உரிய நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்.அந்த செய்திக்குரிய மறுப்பு அல்லது பதில் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரத்தை, அன்றைய தினம் பகல் 2:00 மணிக்குள், செய்தி மக்கள் தொடர்பு துறை வழியாக, சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் மற்றும் 'டிவி'க்களுக்கு அனுப்ப வேண்டும்.


latest tamil news


அதேபோல, செய்தி விபரங்களை தலைமை செயலருக்கு காலை, 9:30 மணிக்கு உள்ளாகவும், நடவடிக்கை விபரத்தை, மாலை, 3:00 மணிக்குள்ளாகவும் தெரிவிக்க வேண்டும். இப்பணியை மேற்கொள்ள, அனைத்து துறைகளிலும் மூன்று பொறுப்பான அதிகாரிகளை, ஒருங்கிணைப்பு அலுவலர்களாக நியமிக்க வேண்டும். அவர்கள் குறித்த விபரங்களை உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். இவர்களுக்கான கூட்டம், முதல்வர் தலைமையில் நடக்க உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
10-டிச-202119:39:14 IST Report Abuse
S. Narayanan இனி அரசு சம்பளம் கொடுக்கவில்லை என்று. சொல்லக்கூடாது. பெட்ரோ டீசல் விலை குறைக்க வில்லை என்று. சொல்லக்கூடாது. மழை நிவாரணம் அரசு கொடுத்த விட்டது என்று அதிகாரிகள் சொல்ல வேண்டும். தேர்தல் அறிக்கையில் கூறிய எல்லா அறிவிப்புகளும் நிறை வெற்றப்பட்டு விட்டது என்று டிவி செய்து சொல்ல வேண்டும். எல்லோரும் அரசு எதையும் செய்யா விட்டால் செய்து விட்டதாக நினைத்து கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
MANIAN K - Dubai ,இந்தியா
10-டிச-202115:15:41 IST Report Abuse
MANIAN K செய்திகள் கவனிக்கப்படுமா அல்லது செய்தி கொடுத்தவர்கள் “தினகரன்”ஐ கவனித்தது போல் நடக்குமா?
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
10-டிச-202113:33:29 IST Report Abuse
Sai வச்சிட்டாருய்யா ஆப்பூ
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
12-டிச-202103:33:46 IST Report Abuse
meenakshisundaramஎல்லாத்துக்கும் ஒரு ''ஆய்வு' அப்புறம் ஒரு 'குழு'?-இதே ஸ்டைலில் போனா அப்புறம் இருக்கிற அரசு அதிகாரிங்க. கலெக்டர் துறைகள். அதுக்கு என்று மந்திரிகள் எல்லாம் எதுக்கு?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X