சென்னை : செய்தித்துறை இயக்குனர், அனைத்து துறைத் தலைவர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள், தினசரி பத்திரிகைகளில் வரும் அரசுக்கு எதிரான செய்திகள் மற்றும் 'டிவி' செய்திகள் விபரங்களை, காலை, 8:00 மணிக்குள், 'வாட்ஸ் ஆப்' வாயிலாக துறை செயலர், துறைத் தலைவர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டும்.
அவர்கள் அந்த செய்தியின் உண்மை தன்மையை சரி பார்த்து, உரிய நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்.அந்த செய்திக்குரிய மறுப்பு அல்லது பதில் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரத்தை, அன்றைய தினம் பகல் 2:00 மணிக்குள், செய்தி மக்கள் தொடர்பு துறை வழியாக, சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் மற்றும் 'டிவி'க்களுக்கு அனுப்ப வேண்டும்.

அதேபோல, செய்தி விபரங்களை தலைமை செயலருக்கு காலை, 9:30 மணிக்கு உள்ளாகவும், நடவடிக்கை விபரத்தை, மாலை, 3:00 மணிக்குள்ளாகவும் தெரிவிக்க வேண்டும். இப்பணியை மேற்கொள்ள, அனைத்து துறைகளிலும் மூன்று பொறுப்பான அதிகாரிகளை, ஒருங்கிணைப்பு அலுவலர்களாக நியமிக்க வேண்டும். அவர்கள் குறித்த விபரங்களை உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். இவர்களுக்கான கூட்டம், முதல்வர் தலைமையில் நடக்க உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE