3 நாட்களுக்கு மழை இல்லை; வறண்ட வானிலை நிலவும்

Added : டிச 10, 2021 | |
Advertisement
சென்னை : 'இன்னும் மூன்று நாட்களுக்கு கன மழை இல்லை; வறண்ட வானிலையுடன் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வடகிழக்கு பருவக்காற்று மிதமாக உள்ளது. எனவே, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கே வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இன்று காலை வரை மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி
TN rain, weather today, weather report

சென்னை : 'இன்னும் மூன்று நாட்களுக்கு கன மழை இல்லை; வறண்ட வானிலையுடன் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவக்காற்று மிதமாக உள்ளது. எனவே, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கே வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இன்று காலை வரை மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழை பெய்யும். பின், 8:30 மணி முதல் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.


latest tamil news


வடக்கு உள் மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். வரும் 12, 13ல் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 31; குறைந்தபட்சம், 25 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் கும்பகோணத்தில், 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. சத்யபாமா பல்கலை, திருவிடைமருதுார், 2; மஞ்சளாறு, வலங்கைமான், தொண்டி,புதுச்சேரியில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X