பிபின் ராவத் உருவ படத்திற்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய குழந்தை!| Dinamalar

பிபின் ராவத் உருவ படத்திற்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய குழந்தை!

Added : டிச 10, 2021 | கருத்துகள் (6) | |
சென்னை: ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், திருவுருவ படத்திற்கு, சென்னை, அனகாபுத்துாரில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ராணுவத்தில் வீரமரணம் அடைந்த பார்த்திபனின் தந்தை மேஜர் நடராஜன், மருத்துவர் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். அப்போது, மருத்துவர்கள் சஞ்சய்குமார்- - லட்சுமி தம்பதியின், ஒன்றரை வயது பெண் குழந்தை அருந்ததி,
Bipin Rawat, CDS, RIP Bipin Rawat

சென்னை: ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், திருவுருவ படத்திற்கு, சென்னை, அனகாபுத்துாரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ராணுவத்தில் வீரமரணம் அடைந்த பார்த்திபனின் தந்தை மேஜர் நடராஜன், மருத்துவர் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். அப்போது, மருத்துவர்கள் சஞ்சய்குமார்- - லட்சுமி தம்பதியின், ஒன்றரை வயது பெண் குழந்தை அருந்ததி, பிபின் ராவத்தின் திருவுருவ படத்திற்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்தியது, அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.


latest tamil news



கிரீன் வேளச்சேரி அமைப்பும், பொதுமக்களும் இணைந்து, பிபின் ராவத் திருவுருவ படத்தை வைத்து, பலியான 13 பேருக்கும் அஞ்சலி செலுத்தினர். குழந்தைகள், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் பங்கேற்றவர்கள், முப்படை தளபதி பிபின்ராவத் குறித்தும், அவரது ராணுவ பணி குறித்தும் பேசினர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X