நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர்கள்... 11.99 லட்சம்! 3 மாவட்டங்களிலும் பட்டியல் வெளியீடு1,334 ஓட்டுச்சாவடிகள் அமைக்கும் பணி விறுவிறு

Added : டிச 10, 2021 | |
Advertisement
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கவுள்ளதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 1,334 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு, தேர்தலுக்கான அனைத்து பணிகளையும், மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கிவிட்டுள்ளன.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், அக்., 6, 9ல் ஊரக உள்ளாட்சி தேர்தல், இருகட்டமாக
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர்கள்... 11.99 லட்சம்! 3 மாவட்டங்களிலும் பட்டியல் வெளியீடு1,334 ஓட்டுச்சாவடிகள் அமைக்கும் பணி விறுவிறு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கவுள்ளதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

1,334 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு, தேர்தலுக்கான அனைத்து பணிகளையும், மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கிவிட்டுள்ளன.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், அக்., 6, 9ல் ஊரக உள்ளாட்சி தேர்தல், இருகட்டமாக நடந்து முடிந்தது. விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கஉள்ளது. இதற்கான பணிகளில், மாவட்ட நிர்வாகம் தீவிரமாகியுள்ளது.அதன்படி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாக வைத்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளுக்கு, வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியலை, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி நேற்று வெளியிட்டார். மாகராட்சி ஆணையர் நாராயணன் பெற்றார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய மூன்று பேரூராட்சிகள் சேர்த்து, ஆண் வாக்காளர் 1 லட்சத்து 33 ஆயிரத்து 124; பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 42 ஆயிரத்து 691; மூன்றாம் பாலினத்தவர் 32 பேர் என, மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 847 வாக்காளர்கள் உள்ளனர்.மொத்தம், 287 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. இதில் 120 ஆண்; 120 பெண்; 47 பொது ஓட்டுச்சாவடிகளாக அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மட்டும், 218 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.வாக்காளர்கள், 2 லட்சத்து 18 ஆயிரத்து 901; ஆண்கள், 1 லட்சத்து 5,682; பெண்கள் 1 லட்சத்து 13 ஆயிரத்து 191; மூன்றாம் பாலினத்தவர் 18 பேர் உள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மறைமலைநகர், மதுராந்தகம் ஆகிய நகராட்சிகள் மற்றும் அச்சிறுப்பாக்கம், கருங்குழி, இடைக்கழிநாடு, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.வாக்காளர் பட்டியலை, செங்கல்பட்டில் நேற்று, கலெக்டர் நேர்முக உதவியாளர் பாலாஜி வெளியிட, கலெக்டர் நேர்முக உதவியாளர் ஆனந்தன் பெற்றார். நகராட்சி, பேரூராட்சிகளில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 869 பேர் உள்ளனர்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாள் வரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விபரங்கள், வருவாய் துறையினரால் மேற்கொள்ளப்படும்.திருவள்ளூர்திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரு மாநகராட்சி, நான்கு நகராட்சி மற்றும் எட்டு பேரூராட்சிகள் உள்ளன. தற்போது, நகர்ப்புற தேர்தல் நடைபெற உள்ளது.இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, நான்கு நகராட்சி மற்றும் எட்டு பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் நேற்று வெளியிட்டார்.

அதன்படி, நகர்ப்புற பகுதிகளில், 3 லட்சத்து, 28 ஆயிரத்து, 342 ஆண்; 3 லட்சத்து, 37 ஆயிரத்து, 85 பெண்; 128 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 6 லட்சத்து, 65 ஆயிரத்து, 555 வாக்காளர்கள் உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்ட வாக்காளர் பட்டியல் விபரம்நகராட்சி வார்டு ஓட்டுச்சாவடி ஆண் பெண் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்செங்கல்பட்டு 33 71 29,024 31,172 8 60,204மதுராந்தகம் 24 34 14,124 13,037 2 27,163மறைமலை நகர் 21 75 39,300 39,576 8 78,884மொத்தம் 78 180 82,448 83,785 18 1,66,251--பேரூராட்சிகளில் ஓட்டுச்சாவடி விபரம்அச்சிறுப்பாக்கம் 15 15 4,169 4,472 0 8,641இடைக்கழிநாடு 21 29 11,446 12,145 3 23,594கருங்குழி 15 15 4,726 5,032 0 9,758மாமல்லபுரம் 15 15 6,145 6,328 0 12,473திருக்கழுக்குன்றம் 18 30 11,567 12,830 1 24,398திருப்போரூர் 15 18 6,199 6,555 0 12,754மொத்தம் 99 122 44,252 47,362 4 91,618
- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X