வெள்ள பாதிப்பை தடுக்க மாநகராட்சி திட்டம்| Dinamalar

வெள்ள பாதிப்பை தடுக்க மாநகராட்சி திட்டம்

Updated : டிச 10, 2021 | Added : டிச 10, 2021 | |
காஞ்சிபுரம்-பாலாற்று வெள்ளத்தில் குடிநீர் குழாய்கள் அடித்துச் செல்லப்படுவதை தடுக்க, 12 அடி உயரத்தில் துாண் அமைத்து, அதன் வழியாக குழாய்கள் அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.காஞ்சிபுரம் பாலாற்று கரையோரம் தேனம்பாக்கம், ஓரிக்கை, வெங்கடாவரம் ஆகிய பகுதிகளில், நீரேற்று நிலையங்கள் இயங்கி வருகின்றன.இப்பகுதி பாலாற்றில் திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து,
 வெள்ள பாதிப்பை தடுக்க மாநகராட்சி திட்டம்

காஞ்சிபுரம்-பாலாற்று வெள்ளத்தில் குடிநீர் குழாய்கள் அடித்துச் செல்லப்படுவதை தடுக்க, 12 அடி உயரத்தில் துாண் அமைத்து, அதன் வழியாக குழாய்கள் அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

காஞ்சிபுரம் பாலாற்று கரையோரம் தேனம்பாக்கம், ஓரிக்கை, வெங்கடாவரம் ஆகிய பகுதிகளில், நீரேற்று நிலையங்கள் இயங்கி வருகின்றன.இப்பகுதி பாலாற்றில் திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, குழாய்கள் வழியாக குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது.ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது, இக்குழாய்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவது வழக்கமாக உள்ளது.

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், அனைத்து குடிநீர் குழாய்களும் அடித்து செல்லப்பட்டு, 20 நாட்களாக குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.தற்போது, குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்பட்டு, நேற்று முதல், அந்தந்த பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.பாலாற்றில் வெள்ளம் ஏற்படும்போது, இதுபோன்ற பாதிப்பை தடுக்கும் வகையில் மாற்று ஏற்பாடு செய்ய, மாநகராட்சி திட்டமிடப்பட்டு உள்ளது.மாநகராட்சி ஆணையர் நாராயணன் கூறியதாவது:ஓரிக்கை, தேனம்பாக்கம் ஆகிய பகுதிகளில், ஆற்றில் வெள்ளம் வந்தாலும், குழாய்கள் பாதிக்காத வகையில் 12அடி உயரத்தில் துாண் அமைத்து, அதன் மேல் குழாய் எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 25லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது. ஆற்றில் தண்ணீர் வற்றியதும் பணி துவங்கும்.இவ்வாறு அவர்கூறினார்.ரூ.22 லட்சத்தில் மதிப்பீடு தயாரிப்புவாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. பாலாற்றில் திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு என, 11 இடங்களில் இருந்து குடிநீர் தேவைக்காக எடுக்கப்படுகிறது.வாலாஜாபாத் சதுக்கம் அருகே இருக்கும் நீரேற்ரும்நிலையத்தில் இருந்து, மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிகளுக்கு ஏற்றப்படுகிறது.வாலாஜாபாத் பாலாற்றில், 20 நாட்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஆற்றில் புதைக்கப்பட்ட குழாய்கள், மின் கேபிள்கள் அடித்துச் செல்லப்பட்டன.

இதனால் மேற்கண்ட பகுதியினருக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. தற்போதைக்கு தினமும் 20 டேங்கர் லாரி வைத்து, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலர் ஒருவர்கூறியதாவது:பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மின் கேபிள் மற்றும் ஆழ்துளை கிணறு ஆகியவை சேதமடைந்துள்ளன. அதை சரிசெய்வதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக, இரு திறந்தவெளி கிணறுகள் துார் வாருவதற்கும், மின் கேபிள் சீரமைப்பதற்கும், 22 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம். விரைவில் பாலாறு குடிநீர் வினியோகிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X