சமூக நலத்துறையில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் ஒரு பெண் குழந்தை இருப்பின் ரூ.50 ஆயிரம், இரண்டு குழந்தைகள் இருப்பின் தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. குழந்தையின் 18 வயது பூர்த்தியடைந்த பிறகு இத்தொகையை பெறலாம்.
இரண்டாவது பெண் குழந்தைக்கு மூன்று வயது பூர்த்தியடையவதற்குள் விண்ணப்பிப்பது அவசியம். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். ஆண் வாரிசு இன்மை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். தாய்மார்களுக்கு 35 வயதுக்குள் இருப்பது அவசியம்.அதே சமயம் தாமதமாக திருணமாகும் பெண்கள், பல ஆண்டுகள் குழந்தையின்றி இருப்பவர்கள், தகுதியிருந்தும் வயது வரம்பால் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் வயது வரம்பு அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது
.தற்போது வயது வரம்பை 35 ல் இருந்து 40 ஆக அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 40 வயதிற்குள் பெற்றோரில் ஒருவர் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருக்க வேண்டும்.சமூக நல அலுவலர் புஷ்பகலா கூறுகையில், ''பெண் குழந்தை வைத்திருப்போர் அக்குழந்தைக்கு 3 வயது பூர்த்தியாவதற்குள் விண்ணப்பிக்கலாம். 40 வயதிற்குள் பெற்றோரில் ஒருவர் குடும்ப கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE