புதுடில்லி: பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர், 'பிபின் ராவத் இறப்பை கொண்டாட வேண்டாம்,' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நமது நாட்டின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் தமிழகத்தின் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய ராணுவத்தை சேர்ந்த பிரிகேடியர் ஆர்.எஸ்.பதானியா பிபின் ராவத் படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவித்திருந்தார். அதற்கு பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரியான அடில் பரூக் ராஜா, 'எனது இதயப்பூர்வமான இரங்கலை ஏற்கவும்,' என பதிலளித்தார். அதற்கு பதானியா, 'நன்றி அடில், ஒரு வீரரிடம் இருந்து இதைத் தான் எதிர்பார்க்கிறோம். சல்யூட்' எனக் கூறினார்.

இதற்கு பதிலளித்த அடில் ராஜா, 'நிச்சயமாக.. ஒரு வீரராக நான் செய்யும் கண்ணியமான செயல் இது. உங்கள் இழப்பிற்கு மீண்டும் வருந்துகிறேன். எதிரி இறந்துவிட்டார் என இறப்பை கொண்டாடாதீர்கள். ஒருநாள் நமது நண்பர்களும் உயிரிழப்பர்,' என தெரிவித்தார். 'நன்றி அடில். போர்க்களத்தில் நாம் எதிரிகள். இனி, நண்பர்களாக இருக்க முடியாவிட்டால், ஒருவருக்கொருவர் நாகரீகமாக இருப்போம்,' என பதானியா பதிலளித்தார். இருநாட்டு ராணுவ அதிகாரிகளின் இந்த உரையாடல் தற்போது வைரலாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE