புதுடில்லி: " நான் ராணுவ வீரரின் மனைவி, எனவே எனது கணவரை சந்தோஷமாக வழியனுப்புகிறேன் " - இருந்தாலும் இது பேரிழப்புதான் என விமான விபத்தில் சிக்கி பலியான பிரிகேடியர் லிட்டெர் மனைவி கீத்திகா கூறியுள்ளார்.

குன்னூர் விமான விபத்தில் சிக்கி பலியான வீரர்களின் இறுதிச்சடங்கு காலை முதல் நடந்து வருகிறது. பிரிகேடியர் லிட்டெர் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ராணுவ உயர் அதிகாரிகள் மத்திய அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
இறுதிச்சடங்கில் சோகத்துடன் இருந்த லிட்டெர் மனைவி கீத்திகாலிட்டெர் ஒரு ஆங்கில தொலைக்காட்சி நிருபரிடம் பேசுகையில்; " அவருக்கு நாம் நல்லவிதமாக பிரிவை சிரித்த முகத்துடன் வழியனுப்பி வைக்க வேண்டும். அவரது மறைவு பெரிய இழப்புதான், ஆனால் நான் ராணுவ வீரரின் மனைவி. " என்றார்.
எனது வழிகாட்டி- மகள் சொல்கிறார்

இது போல் அவரது மகள் அஷானா லிட்டெர் கூறுகையில்: எனது தந்தை எனக்கு ஹீரோ, எனது சிறந்த நண்பர், அவர் எனது வழிகாட்டியாக ஊக்குவிப்பவராக இருந்தார். 17 ஆண்டு கால நினைவுகளை நான் அசை போடுகிறேன். ஏனெனில் அவர் என்னுடன் 17 வருடங்களாக வாழ்ந்துள்ளார். மறைவு எனது மோசமான நிகழ்வாக இருக்கலாம் இருப்பினும் மனதை தேற்றுகிறேன். என்றார் கண் கலங்கியவாறு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE