காவிரி - கோதாவரி இணைப்பு பேச்சு நடத்த தமிழகம் முயற்சி

Updated : டிச 11, 2021 | Added : டிச 10, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை:காவிரி - கோதாவரி இணைப்பு தொடர்பாக, அண்டை மாநிலங்களுடன் பேச்சு நடத்த தமிழக அரசு முயற்சித்து வருகிறது.ஆந்திராவில் பாயும் கோதாவரி ஆற்றின் வழியாக, ஆண்டுதோறும் 300 டி.எம்.சி., நீர் கடலில் கலந்து வீணாகிறது.வலியுறுத்தல் இந்த நீரை, வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விட்டால், அதனை பயன்படுத்தி சாகுபடி மற்றும் குடிநீர் உள்ளிட்ட தேவைகளை தீர்க்க முடியும்.இதற்காக,
 காவிரி - கோதாவரி இணைப்பு பேச்சு , தமிழகம் முயற்சி

சென்னை:காவிரி - கோதாவரி இணைப்பு தொடர்பாக, அண்டை மாநிலங்களுடன் பேச்சு நடத்த தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
ஆந்திராவில் பாயும் கோதாவரி ஆற்றின் வழியாக, ஆண்டுதோறும் 300 டி.எம்.சி., நீர் கடலில் கலந்து வீணாகிறது.


வலியுறுத்தல்

இந்த நீரை, வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விட்டால், அதனை பயன்படுத்தி சாகுபடி மற்றும் குடிநீர் உள்ளிட்ட தேவைகளை தீர்க்க முடியும்.இதற்காக, காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த இணைப்பு திட்டத்தை, தேசிய நதிநீர் மேம்பாட்டு முகமை வாயிலாக செயல்படுத்த மத்திய அரசு முன்வந்துள்ளது. இதற்காக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
திட்ட அறிக்கையின்படி, காவிரி - கோதாவரி இணைப்பை செயல்படுத்த, 85 ஆயிரத்து 962 கோடி ரூபாய் செலவாகும்என்று மதிப்பிடப்பட்டுள்ளது.1,211 கி.மீ., கால்வாய்இத்திட்டத்திற்காக, தெலுங்கானா மாநிலம் இச்சம்பள்ளியில், கோதாவரி ஆற்றில் அணை கட்டப்பட உள்ளது. அங்கிருந்து, 1,211 கி.மீ., கால்வாய் வெட்டப்பட்டு, தஞ்சாவூர் கல்லணை கால்வாயில், காவிரி ஆற்றுடன் இணைக்கப்பட உள்ளது.
இதற்காக, 19 இடங்களில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டு, நீரேற்று முறையில் தண்ணீர் அனுப்ப, 366 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கும் நீர்மின் உற்பத்தி நிலையமும் கட்டப்பட உள்ளது. இத்திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம், ஐதரபாத்தில் நடந்த போது, திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஆந்திர அரசு முன்வந்தது. கர்நாடகா, தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.


கிடப்பில் போடப்பட்ட பணி

தெலுங்கானா மாநிலம் இச்சம்பள்ளியில், 15 டி.எம்.சி., நீரை சேமிக்க, 87 மீட்டருக்கு அணை கட்டப்பட உள்ளது. இதற்கு ஒன்பது கிராமங்களில் உள்ள 21 ஆயிரத்து 575 வீடுகளை கையகப்படுத்த வேண்டியுள்ளது.இதனால், நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, தெலுங்கானா மாநில அரசு தயக்கம் காட்டுகிறது;
மத்திய அரசும், திட்டத்தின் அடுத்தகட்ட பணிகளை துவக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்த, அடுத்தக்கட்ட பேச்சு நடத்தி, மூன்று மாநிலங்களின் ஒத்துழைப்பை பெற வேண்டும். ஜன., மாதம் பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி, தேசிய நதிநீர் மேம்பாட்டு முகமையிடம், தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatasubramanian krishnamurthy - குடியாத்தம்.,இந்தியா
11-டிச-202118:46:19 IST Report Abuse
Venkatasubramanian krishnamurthy எல்லாம் சரி. கர்நாடகாவில் மழைக்காலங்களில் வரும் நீரால் மேட்டூரும் நிரம்பி அதிலிருந்து வெளியேற்றப்படும் நீரையே சேமிக்க வழியில்லாமல் கடலுக்குப் போகிற நிலையில் இருக்கும்போது..இந்த இணைப்பால் கல்லணைக்கு வரும் சேமிக்க எந்த விதமான யோசனைகளை தமிழக அரசு வைத்திருக்கிறதாம்?
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
11-டிச-202111:25:18 IST Report Abuse
பாமரன் சில வருடங்களுக்கு முன் கட்கரி ஒரு தபா தமிழ் நாடு வந்தப்போ இந்த திட்டம் பற்றி சொன்னாப்ல... அதுக்கு பகோடாஸ் லலல்லா லலல்லா பாடுனாய்ங்க... அப்பவே சொன்னேன் இது நடக்க வாய்ப்பு கம்மின்னு.. ஆனால் பிளிங்கர் கட்டப்பட்ட பகோடாஸ் எடுபுடியும் அதைவிட தெறமையான மத்திய அரசும் இதை நிறைவேற்றி டீம்கா ஆட்சிக்கு வராமல் பண்ணுவாங்கன்னு சொல்லி என்னை வைதாங்க...😩 இப்பவும் சொல்வேன் நடப்பு சூழ்நிலையில் இது சாத்தியப்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு... (கருப்பு பணம் மாதிரி) தேர்தல் நேரத்தில் பல் குத்த உதவும் டூல் அவ்ளோ தான்...
Rate this:
11-டிச-202120:35:18 IST Report Abuse
Vittalanandஇவ்வங்க முதலில் வேங்கட சுப்ரமணியனின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். கர்நாடகா தரும் நீரையே முழுதுமாக சேமிக்க முடியாத இவர்கள் கோதாவரி நீரை வைத்து என்ன செய்ய போகிறார்கள்? நமது மின் வாரியம் மேட்டூர் முதல் ஈரோடு வரை அமைத்த 4 தடுப்பணை மின் நிலையங்களில் சேமிக்கும் காவிரி நீரை தவிர வேறெங்கும் நீர் சேமிக்கும் வசதி இல்லை.. சென்னைக்கு கிருஷ்ணா நீர் வராயஹ்தசி வேண்டுமானால் அதிகரிக்கலாம். பாலாற்றில் விட்டு பாசனம் பெறலாம். திராவிட திட்டங்கள் எல்லாமே காசடோக்கும் யபிட்டங்களே. கூவம் திட்டம் போன்றவை...
Rate this:
Cancel
THANGARAJ - CHENNAI,இந்தியா
11-டிச-202110:08:57 IST Report Abuse
THANGARAJ நல்ல முயற்சி. தமிழ் நாட்டில் வட கிழக்கு பருவமழை சமயம் நிறைய நீர் வீணாக போகிறது, ஆதலால் தமிழ் நாட்டுக்குள் நதிகளை இணைத்து அகலமான பாதைகள் ஏற்படுத்தி நீர் போக்குவரத்து / பூங்கக்கள் / சுற்றலா என தமிழ் நாட்டை நாம் வள படுத்தலாம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X