புதுடில்லி :அயோத்தி விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, அன்று மாலை நட்சத்திர ஓட்டலில் விருந்தில் பங்கேற்றது குறித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் விளக்கம் அளித்துள்ளார்.
'ஜஸ்டிஸ் பார் தி ஜட்ஜ்'
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் ரஞ்சன் கோகோய், 67. ரபேல், அயோத்தி விவகாரம் போன்ற முக்கிய வழக்குகளில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியவர். தற்போது ராஜ்யசபா உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.இவர் 'ஜஸ்டிஸ் பார் தி ஜட்ஜ்' என்ற சுயசரிதை புத்தகத்தை சமீபத்தில் எழுதி வெளியிட்டார். அதில், நீதிபதி ரஞ்சன் கோகோய் சக நீதிபதிகளுடன் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விருந்தில் பங்கேற்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதில், 'அயோத்தி தீர்ப்பை கொண்டாடிய போது' எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.மேலும் 'அயோத்தி விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்ட அன்று மாலை, அந்த அமர்வில் இடம் பெற்று இருந்த நீதிபதிகளை டில்லி தாஜ் மான்சிங் ஓட்டலுக்கு விருந்துக்கு அழைத்து சென்றேன்.
'அங்கு கிடைத்த மிகச்சிறந்த 'வைன்' வாங்கி அருந்தினோம். சீன உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்தோம்' என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.'சர்ச்சைக்குரிய விவகாரமான அயோத்தி தீர்ப்பு கொண்டாட்டத்துக்கு உரியதா' என, அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ரஞ்சன் கோகோய் கூறியதாவது:இது தீர்ப்பை கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து அல்ல. அந்த அமர்வில் என்னுடன் பணியாற்றிய நீதிபதிகள், நான்கு மாதங்கள் கடும் உழைப்பை தந்தனர்.
சிறிய ஓய்வு
அதில் இருந்து அவர்களுக்கு சிறிய ஓய்வு அளிக்கவே அந்த விருந்துக்கு அழைத்துச் சென்றேன். அனுமதிக்கப்படாத எதையும் நாங்கள் செய்யவில்லை. நண்பர்களுடன் விருந்து சாப்பிட எப்போதாவது வெளியே செல்லும்போது, நாம் விரும்பியதை சாப்பிடுவது தானே இயல்பு!இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE