இந்தியாவில் வலிமையான ஜனநாயகம்: மோடி பெருமிதம்

Updated : டிச 12, 2021 | Added : டிச 10, 2021 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி :''இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயகம் இருந்து வருகிறது. 300 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால் இந்திய மக்களிடம் இருந்த ஜனநாயக உணர்வை அழிக்க முடியவில்லை,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்பாடு செய்திருந்த ஜனநாயகம் பற்றிய மாநாட்டில் 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக பிரதமர் மோடி நேற்று
இந்தியா, வலிமையான ஜனநாயகம்,  மோடி பெருமிதம்

புதுடில்லி :''இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயகம் இருந்து வருகிறது. 300 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால் இந்திய மக்களிடம் இருந்த ஜனநாயக உணர்வை அழிக்க முடியவில்லை,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்பாடு செய்திருந்த ஜனநாயகம் பற்றிய மாநாட்டில் 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக பிரதமர் மோடி நேற்று பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:இந்தியாவில் 1950ல் தான் ஜனநாயகம் ஏற்பட்டதாக சிலர் கருதுகின்றனர். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஜனநாயகம் இருந்துள்ளது.ஒன்றுபட்ட மக்கள் நம் நாட்டை 300 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த ஆங்கிலேயர்களால் இந்திய மக்களிடம் இருந்த ஜனநாயக உணர்வை அழிக்க முடியவில்லை.

இந்தியாவில் மொழி, உணவு, உடை, என பலவற்றிலும் வேற்றுமைகள் உள்ளன. ஆனாலும் கலாசார ரீதியாக மக்கள் ஒன்று பட்டுள்ளனர். மக்களிடம் உள்ள ஜனநாயக உணர்வால்தான் இங்கு சுதந்திரமாக தேர்தல் நடத்தப்படுகிறது. நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் வெளிப்படையாக செயல்படுகின்றன.

பல கட்சிகள் போட்டியிடும் தேர்தல், சுதந்திரமான நீதித்துறை, சுதந்திரமான ஊடகம் ஆகியவை தான் ஜனநாயகத்தின் முக்கியமான கருவிகள். எனினும் மக்களிடமும், சமூகத்திடமும் ஜனநாயகஉணர்வு மேலோங்கியிருப்பது தான் மிகவும் முக்கியம்.இவ்வாறு மோடி பேசினார்

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
11-டிச-202116:35:28 IST Report Abuse
J. G. Muthuraj பிரிட்டிஷ்காரன் நம் நாட்டை கொள்ளையடித்தவன் தான். நில ஆக்கிரமிப்பு செய்தவன்தான். பிரிட்டிஷ் இந்தியா /500 க்கும் அதிகமான மன்னர்கள் ஆண்ட இந்தியா என்ற இரு இந்தியாக்கள் இருந்தன. இரண்டையும் ஒன்றாக்கினான்.பின்பு இந்திய சுதந்திர வீரர்களாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்தாலும் மக்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது அரசியல் சாசனம் எழுதப்பட்டது. பிரிட்டிஷ்காரன் வழி காண்பித்த பார்லிமென்ட் ஆட்சிமுறை பின்பற்றப்பட்டது. இந்திய ஜனநாயகத்தின் பிரயாணத்தில் பிரிட்டிஷ்காரன் பங்கும் இருக்கிறது. மொகலாயர்கள், துருக்கியர்கள், பாரசீகர்கள், அரபியர்கள் இந்தியாவை ஜனநாயகத்துடன் ஆண்டார்களா? எல்லோருமே DYNASTY RULE பின்பற்பற்றினாங்க. மன்னர்களுக்கு ஆண்வாரிசு இல்லையென்றால், பரம்பரை ஆட்சி கிடையாது என்று சட்டம் கொண்டு வந்து வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். அவனிடமிருந்து ஆங்கில கல்வி பயின்றோம். மருத்துவம் கற்றோம். சட்ட கொள்கை, விதிமுறைகளை கற்றோம். இருப்பினும், இந்தியா நம் நாடு. பிரிட்டிஸ்காரன் அந்நியன். இப்போது சமமான நிலையில் உறவுக்கார நண்பனாயிருக்கிறான். எங்களை ஆண்ட அந்நியர்களிடமிருந்தும் சிலவற்றை கற்றோம் அவர்களுக்கும் கற்றுக்கொடுத்தோம் என்று சொல்வதானால், நமது பெருமை கௌரவம் குறைந்துவிடாது.....
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
11-டிச-202111:20:43 IST Report Abuse
ஜெயந்தன் உதடுகள் பேசுவது உள்ளத்திருந்து வர வேண்டும்....
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
11-டிச-202110:06:10 IST Report Abuse
Sandru வலிமையான ஜனநாயகம், வலிமையான பொருளாதாரம், பெருமிதம் என எதை சொன்னாலும் இன்னுமா இந்த மக்கள் நம்புகிறார்கள்- மோடியின் மைண்ட் வாய்ஸ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X