பீரங்கி குண்டுகள் முழங்க பிபின் ராவத் உடல் தகனம்!: மக்கள் கண்ணீர் அஞ்சலி

Updated : டிச 12, 2021 | Added : டிச 10, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், 63, மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரது உடல்கள், 17 பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் டில்லியில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டன. தலைமை தளபதியின் இறுதி ஊர்வலத்தின் போது, சாலையின் இரு புறங்களிலும் திரண்டிருந்த மக்கள், மலர்களை துாவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். நம்
பீரங்கி குண்டுகள், ராவத் உடல்.தகனம்,  மலர் துாவி கண்ணீர்

புதுடில்லி : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், 63, மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரது உடல்கள், 17 பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் டில்லியில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டன.

தலைமை தளபதியின் இறுதி ஊர்வலத்தின் போது, சாலையின் இரு புறங்களிலும் திரண்டிருந்த மக்கள், மலர்களை துாவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். நம் நாட்டின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், தமிழகத்தின் நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே 8ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவருடன் இருந்த அவரது மனைவி மதுலிகா ராவத்தும் பலியானார்.


கடவுளின் விருப்பம்இவர்களுடன் ஹெலிகாப்டரில் பயணித்த பிரிகேடியர் லிட்டெர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், விங் கமாண்டர் பி.எஸ்.சவுஹான், ஸ்குவாட்ரன் லீடர் கே.சிங், நாயக் குருசேவக் சிங்.
நாயக் ஜிதேந்தர் குமார், லான்ஸ் நாயக் விவேக், லான்ஸ் நாயக் பி.எஸ்.தேஜா, ஹவில்தார் சத்பால், ஜூனியர் வாரன்ட் அதிகாரிகள் தாஸ் மற்றும் பிரதீப் ஆகியோர் பலியாகினர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிருக்கு ஆபத்தான நிலையில் கர்நாடகாவின் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த 13 பேரில் பிபின் ராவத், மதுலிகா ராவத் மற்றும் பிரிகேடியர் லிட்டெர் ஆகியோரது உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டன.

மற்ற 10 பேரின் உடல்கள் அடையாளம் காண்பதற்காக டில்லியில் உள்ள ராணுவ மருந்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரிகேடியர் லிட்டெரின் உடல் டில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள பரார் சதுக்கம் மயானத்தில் நேற்று காலை தகனம் செய்யப்பட்டது.
அவரது மனைவி கீத்திகா லிட்டெர் கூறுகையில், ''இந்த நீண்டநெடிய வாழ்க்கையில் கடவுளின் விருப்பம் இதுவானால் அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இது மிகப் பெரிய இழப்பு,'' என்றார்.

பிரிகேடியர் லட்டெரின் மகள் ஆஷ்னா லிட்டெர் கூறுகையில், ''என் தந்தை தான் எனக்கு ஹீரோ. அவர் என் நண்பனை போல இருந்தார். இது ஒரு தேசிய இழப்பு. அவருடன் வாழ்ந்த 17 ஆண்டுகள் எப்போதும் நினைவில் இருக்கும்,'' என்றார்.ஜெனரல் பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத் உடல்கள் டில்லி காமராஜர் சாலையில் உள்ள அவர்களது இல்லத்தில் அஞ்சலிக்காக நேற்று காலை வைக்கப்பட்டன.


விண்ணை பிளந்தனமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காங்., - எம்.பி.,ராகுல், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹிந்து மத துறவியர் உட்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பிபின் ராவத்தின் இளைய சகோதரர் விஜய் ராவத் உட்பட உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ராவத்தின் மகள்கள் தாரிணி மற்றும் கிருத்திகா ஆகியோர் தங்களின் பெற்றோர் உடல்கள் முன் கண்ணீர் மல்க அமர்ந்திருந்தனர். முப்படை தலைமை தளபதி மற்றும் அவரது மனைவியின் இறுதி ஊர்வலம், அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் மதியம் 2:40 மணிக்கு புறப்பட்டது.

டில்லி காமராஜர் சாலையில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியின் பரார் சதுக்க மயானம் வரை உடல்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.
வழியெங்கும் திரளாக திரண்டு நின்ற பொதுமக்கள் மலர் துாவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.'பாரத் மாதா கீ ஜெய், வந்தே மாதரம்' என்ற முழக்கம் விண்ணை பிளந்தன.
முப்படைகளை சேர்ந்த வீரர்கள் வாத்திய கருவிகளை இசைத்தபடி சாலையில் ஊர்வலமாக சென்று, தங்கள் தலைமை தளபதிக்கு இறுதி மரியாதையை செலுத்தினர்.


ஹிந்து முறைபரார் சதுக்கத்துக்கு உடல்கள் வந்தடைந்ததும் பல்வேறு நாடுகளின் துாதரக அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதன்பின் இருவரின் உடல்களும் ஒரே சிதையில் வைக்கப்பட்டன. உடல்களுக்கு பிபின் ராவத்தின் மகள்கள் தாரிணி மற்றும் கிருத்திகா இறுதி சடங்குகளை செய்தனர். இதில் 800க்கும் மேற்பட்ட முப்படை அதிகாரிகள் பங்கேற்றனர். ஹிந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் நடந்தன. 17 பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. தங்கள் பெற்றோர் உடல்களுக்கு, மகள்கள் தீ மூட்டினர். இருவரது அஸ்தியும் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று கரைக்கப்பட உள்ளதாக இளைய மகள் தாரிணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-டிச-202122:36:59 IST Report Abuse
சம்பத் குமார் Salute sir, Jai Jawan Jai Bharat Jai Hind
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11-டிச-202107:25:50 IST Report Abuse
Kasimani Baskaran இந்தியாவுக்கு இது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X