முகக்கவசம் அணியும் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை கவலை

Updated : டிச 10, 2021 | Added : டிச 10, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
டில்லி: இந்தியர்கள் மத்தியில் முகக்கவசம் அணியும் பழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது என சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.இந்தியாவில் தற்போது 25 ஓமிக்ரோன் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளனர். இவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் யாருக்கும் தீவிர பாதிப்பு ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தகவல்

டில்லி: இந்தியர்கள் மத்தியில் முகக்கவசம் அணியும் பழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது என சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.



latest tamil news



இந்தியாவில் தற்போது 25 ஓமிக்ரோன் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளனர். இவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் யாருக்கும் தீவிர பாதிப்பு ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை ஒன்றிய செயலாளர் லவ் அகர்வால் கூறுகையில் தற்போது இந்தியாவில் முகக் கவசம் அணியும் பழக்கம் குடிமக்களிடம் இருந்து வெகுவாக குறைந்து வருகிறது.உலக சுகாதார அமைப்பு இதுகுறித்து தொடர்ந்த எச்சரிக்கை வெளியிட்டு வருகிறது. தடுப்பு மருந்து செலுத்துதல் மற்றும் முக கவசம் அணிதல் ஆகிய இரண்டும் மிகவும் அவசியமானது.


latest tamil news



தற்போது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் 0.73 சதவீதம் மக்கள் மட்டுமே வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர். கடந்த 14 நாட்களில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் நோயாளிகள் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
கேரளா, மஹா., ஆகிய இரு மாநிலங்களிலும் தற்போது சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவ்வாறு லவ் அகர்வால் தகவல் அளித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
11-டிச-202109:06:50 IST Report Abuse
venkatan தடுப்பு ஊசி போட்டால் தொற்றின் உக்கிரம் குறைந்து மரண விகிதம் குறைகிறது என்ற பிராக்டிக்கலான நிகழ்வை ஏற்க மறுத்து நீதிமன்ற கதவுகளை த் தட்டும் ஒர் கூட்டம். அறிவியலைக்கக்கூட நம்ப மறுக்கும் மூடர்கள் கூடம்..
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
11-டிச-202104:30:17 IST Report Abuse
J.V. Iyer எப்படியும் இதனால் நன்மைதான். பாதிப்பு வந்து மக்கள் இறந்தால், மக்கள் தொகை குறையும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி வந்தால், கவலை இல்லை.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
11-டிச-202103:21:24 IST Report Abuse
M S RAGHUNATHAN நேற்று ஒரு புகைப்படம் பார்த்தேன். திரு A R Rahman அவர்கள் வீட்டு திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்று இருந்தார் மண மக்களை வாழ்த்தும்போதும் வீடியோ எடுக்கும்போதும் அவரோ அல்லது கூட இருந்த்தவர்களோ யாரும் முக கவசம் அணியவில்லை. ஊருக்குத் தான் உபதேசம் எப்படி கவசம் அணிவது, கை சுத்தம் செய்வது என்று விளம்பரம் ஏன் ? சன் டிவி மற்றும் கலைஞர் TV மட்டும் அரசு விளம்பரம். Scientific Corruption. As is father so is son.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X