உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
எஸ்.மார்டின், சுசீந்திரம், குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
எத்தனை மருந்துகள் வந்தாலும் கொசுவை ஒன்றும் செய்ய முடியாது. அது போல, நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு காரணமான, அரசியல்வாதிகளை ஒன்றும் செய்ய முடியாது!
![]()
|
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், 'நீர்நிலை ஆக்ரமிப்பு தொடர்பாக, வெறும் சம்பிரதாயத்திற்காக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் யாரும் தப்ப முடியாது; நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என்று எச்சரித்துள்ளனர்.
![]()
|
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அரசியல்வாதிகள் இசைக்கும், 'டியூனு'க்கேற்ப அதிகாரிகள் நடனமாடுகின்றனர். அப்படி ஆடாவிட்டால், அந்த அதிகாரிகளின், 'டப்பா' டான்ஸ் ஆடிவிடும்! உடனடியாக குடும்பத்தோடு மூட்டை முடிச்சு கட்டியபடி, பணி இடமாறுதலுக்கு தயாராக வேண்டும்.
![]()
|
'எதற்கு வம்பு?' என்று இந்த அரசு அதிகாரிகள், அந்த அரசியல்வாதிகளின் தாளத்திற்கேற்ப நடனமாடி, தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்கின்றனர். முறைப்படி அதற்குண்டான, 'கமிஷனை'யும் ஞாபகமாக வாங்கிக் கொள்கின்றனர்; அவ்வளவு தாங்க.
நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு மூல காரணமான அரசியல்வாதிகளை பற்றி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அளித்துள்ள எச்சரிக்கையில், ஒரு வார்த்தை கூட இடம் பெறவில்லை.இப்படி இருந்தால், ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலையை எப்படி மீட்க முடியும்?'
அதிகாரிகள் செய்யும் தவறுக்கு, அரசை குறை கூற முடியாது' என்று வேறு, நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அரசு என்பதே, அந்த அரசியல்வாதிகள் தான். அரசியல்வாதிகள் திருந்தாத வரை, நீர்நிலை ஆக்கிரமிப்பு ஓயாது!
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement